A Raja | Lok Sabha Election | Nilgiris | நீலகிரி மாவட்டம் குன்னூரில் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, “பாரதிய ஜனதா ஆட்சியில் அனைத்து இடங்களிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. பங்குச் சந்தை உள்பட அனைத்து இடங்களிலும் ஊழல் செய்துவிட்டு, நான் தான் விஸ்வகுரு, உலகத்தின் தலைவர் என சொல்கிறார் நரேந்திர மோடி” என்றார்.
தொடர்ந்து, தன்னுடைய மனைவி குறித்து பேசுகையில், “அவர் தீவிர ராம பக்தை” என்றார். இதுகுறித்து ஆ.ராசா, எனது மனைவி தீவிர ராம பக்தை. சனிக்கிழமை ராமருக்காக விரதம் இருப்பார்.
திங்கள்கிழமை சிவனுக்காக விரதம் இருப்பார்; வியாழக்கிழமை எனக்காக விரதம் இருப்பார்” என்றார். ஆக வாரத்தில் 3 நாள்கள் அவர் விரதத்தில் இருப்பார்” என்றார்.
மேலும், தனது வீட்டில் பூஜை அறை உண்டு, அங்கு நான் ஒருநாளும் சென்றது கிடையாது எனக் கூறிய ஆ. ராசா, தனது மனைவிக்கு கடவுள் நமபிக்கை உண்டு என்றார்.
தொடர்ந்து, கடவுளும் பக்தியும் நமது தேவைக்காகவே உள்ளது என்ற ஆ. ராசா, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கையில் இருக்கட்டும், கடவுளை வழிபடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்றார்.
தொடர்ந்து, கள்ளம் இல்லாத உள்ளம்தான் கடவுள்; ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்” என்றார். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. நீலகிரியில் ஆ. ராசாவை எதிர்த்து பா.ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் எல். முருகன் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“