Advertisment

விஸ்வரூபம் எடுக்கும் நிதி பங்கீடு: ஒரு ரூபாய் அடிப்படையில் தமிழகத்துக்கு கிடைப்பது எவ்வளவு?

ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரி வருவாயின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சகம் தென் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

author-image
WebDesk
New Update
DMK MP A RAJA share about revenue sharing formula by centre to States in tamil

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்கிய ஒவ்வொரு ரூபாயின் அடிப்படையில் மத்திய அரசு திருப்பித் அளித்த தொகை.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Central Government: மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. நிதி ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

Advertisment

கர்நாடாக போராட்டம்  

கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் அரசு ,டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று (பிப்ரவரி 7ம் தேதி) போராட்டம் நடத்தியது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தங்களின் கைகளில் ஏந்தியிருந்தனர்.

கேரளா போராட்டம் - தி.மு.க ஆதரவு

இந்நிலையில், நிதி பங்கீட்டில் அநீதி இழைப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், எம்.பிக்கள், இடதுசாரி கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். 

மேலும் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் உள்ள கேரள பவனில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி நடத்தினர். இப்போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது. தி.மு.க. சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார்.

மாநிலங்களுக்கு நிதி பங்கீடு எவ்வளவு?

இந்நிலையில், ஜி.எஸ்.டி மற்றும் நேரடி வரி மூலம் ஒவ்வொரு மாநிலமும் செலுத்திய தொகை மற்றும் அதற்கு மத்திய அரசு திருப்பி அளித்த தொகை (ஒரு ரூபாய் அடிப்படையில்) குறித்து தி.மு.க எம்.பி ஆ.ராசா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்கிய ஒவ்வொரு ரூபாயின் அடிப்படையில் மத்திய அரசு திருப்பித் அளித்த தொகை பின்வருமாறு:- 

1. தமிழ்நாடு – 26 பைசா

2. கர்நாடகா – 16 பைசா

3. தெலங்கானா – 40 பைசா

4. கேரளா – 62 பைசா

5, மத்தியப் பிரதேசம் – 1 ரூபாய் 70 பைசா

6. உத்தரப் பிரதேசம் – 2 ரூபாய் 2 பைசா

7. ராஜஸ்தான் – 1 ரூபாய் 14 பைசா. 

திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு

ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரி வருவாயின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சகம் தென் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக  தி.மு.க எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வசூலிக்கப்படும் தொகை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படல்லை என்று தெளிவாகிறது.  பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட மற்ற மாநிலங்களை விட தென்மாநிலங்கள் குறைவாகவே பெறுகின்றன.  அதாவது, ஜி.எஸ்.டி. வரி வருவாயில் தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும்,  மற்ற மாநிலங்களை விட குறைவான வருமானத்தையே தென்மாநிலங்கள் பெறுகின்றன.

1) தமிழ்நாடு,  ஆந்திரப் பிரதேசம்,  தெலங்கானா,  கேரளா,  கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் பங்களித்த மொத்த வரி (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டி நீங்கலாக) – ரூ.22,26,983.39 கோடி,  கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தால் பங்களிக்கப்பட்ட தொகை Rs.3,41,817.60 கோடி. 

2) கடந்த 5 ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் (ஒட்டுமொத்தமாக) – ரூ.6,42,295.05 கோடி.  உத்தரப்பிரதேசத்திற்கு விடுவிக்கப்பட்ட தொகை – ரூ.6,91,375.12 கோடி. " என்று கூறியுள்ளார். 

மேலும், நாடாளுமன்றத்தில்  தி.மு.க எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிஅளித்த பதில் என்று பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.  

"(a) கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பெறப்பட்ட ஜிஎஸ்டி, நேரடி, மறைமுக மற்றும் பிற வரி பங்களிப்புகளின் விவரங்கள்

(b) கடந்த ஐந்து ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட மத்திய வரிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்கள்

(c) பல்வேறு மாநிலங்கள் கேட்டுக் கொண்டுள்ளபடி, வரி ஒதுக்கீட்டு முறையை மாற்றுவதற்கான யோசனை ஏதேனும் அமைச்சகத்தால் பரிசீலிக்கப்படுகிறதா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment