திருநெல்வேலி திமுக எம்பி ஞானதிரவியம், தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி மறை மாவட்ட ஆயர் பிஷப் பர்னபாஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் தாளாளர் நியமனம் தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Advertisment
அதாவது, திமுக எம்.பி. ஞானத் திரவியம் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி தாளாளராகவும், நெல்லை திருமண்டல உயர் கல்வி நிலைக்குழு செயலாளராகவும் பதவி வகித்துவந்தார்.
இந்நிலையில் பர்னபாஸ், ஞானத்திரவியம் இடையே மோதல் ஏற்பட்டது. தவறு செய்த பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு பர்னபாஸ் ஆதரவாக செயல்படுகிறார் என ஞானத்திரவியம் தரப்பு குற்றஞ்சாட்டியது.
இதற்கிடையில் அடுத்து நடந்த அதிடியான சம்பவங்களில் மதபோதகர் ஒருவர் தாக்கப்பட்டார். இது தொடர்பான புகாரில் ஞானத் திரவியம், வழக்கறிஞர் ஜான் என 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர் ஜான் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஞானத்திரவியத்துக்கு திமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“