முந்திரி ஆலையில் 60 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள கடலூர் மக்களவைத் தொகுதியின் திமுக எம்.பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
கடலூர் தொகுதி திமுக எம்.பி டி.ஆர்.விஎஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் உள்ளது. இவருடைய முந்திரி ஆலையில் வேலை செய்துவந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு (60) கொலை செய்யப்பட்ட வழக்கில் எம்.பி. ரமேஷ் கடந்த அக்.11-ல்பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது,திமுக எம்.பி டி.ஆர்.விஎஸ். ரமேஷ் பண்ருட்டியில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து நீதிமன்றக் காவலில், அக்டோபர் 11ஆம் தேதி முதல் சிறையில் உள்ளதாகக் கூறி அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. இதையடுத்து, திமுக எம்.பி டி.ஆர்.விஎஸ். ரமேஷுக்கு நீதிபடி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில், நீதிமன்றக் காவலில் ஒரு மாதத்துக்கு மேலாக கடலூர் கிளைச் சிறையில் இருந்துவரும் திமுக எம்.பி டி.ஆர்.வி.எஸ் ரமேஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"