Advertisment

தி.மு.க வி.ஐ.பி இல்ல விழாவில் டாக்டர் ராமதாஸ்: ஸ்டாலினுக்கு பதிலாக வந்த உதயநிதி

தி.மு.க-வின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் இல்லத் திருமண விழாவில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் நடிகர் சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jagathrakshagan family function, DMK MP Jagathratchagan family function, Udhayanidhi Stalin, Udhayanidhi, Durga Stalin, Dr Ramadoss, Anbumani Ramadoss

தி.மு.க-வின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் இல்லத் திருமண விழாவில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் நடிகர் சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

Advertisment

தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், தற்போது அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.

அ.தி.மு.க-வில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ஜெகத்ரட்சகன் திமுகவில் இணைந்தார். 1999-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2004-ம் ஆண்டு வீர வன்னியர் பேரவை என்ற கட்சி தொடங்கி நடத்தி வந்த நிலையில், 2009-ம் ஆண்டு அக்கட்சியை தி.மு.க-வுடன் இணைத்தார்.

இதையடுத்து, மத்தியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்த போது ஜெகத்ரட்சகன் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக இருந்தார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் மூலம் ஆன்மீகக் கருதுகளைப் பரப்பி ஆன்மீகப் பணிகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் இல்லத் திருமண விழா திங்கள்கிழமை (நவம்பர் 14) சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், துர்கா ஸ்டாலின், உதயநிதி, துரைமுருகன், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், நடிகர் சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஜெகத்ரட்சகன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்வதாக இருந்த நிலையில், டெல்டா மாவட்ட மழை பாதிப்புகளைப் ஆய்வு செய்வதற்கு சென்றதால், அவர் கலந்துகொள்ள முடியவில்லை என திருமணத்தில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் இல்லத் திருமண விழாவில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், அமைச்சர் துரைமுருகன் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜெகத்ரட்சகன் இல்லத் திருமண விழாவில், உதயநிதி, ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Udhayanidhi Stalin Dr Ramadoss S Jagathratchagan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment