சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் ‘சமூக புரட்சி’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க., எம்.பி., கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக வன்முறை அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தும், இந்த சமூகம் பெண்களை மிதித்துக் கொண்டே இருப்பதாக தி.மு.க., எம்.பி., கனிமொழி வேதனை தெரிவித்தார்.
சமூக மாற்றம் ஒருவரால் உருவாக்க முடியாது என்றும், எல்லோரும் இழுக்கும் தேர் போன்ற விஷயம் என்றும் கூறினார். உதவித் தொகை, இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தான் சாதி சான்றிதழ் என்றும், சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் பெரும் போராட்டம் தேவை என்று மாணவிகளுக்கு கூறினார்.