20,000-க்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு (சி.ஜி.எல்) ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சி.ஜி.எல் தேர்வு மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு துறைகளில் குறைந்தது 20,000 பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தி.மு.க எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசு துறை பதவிகளுக்கான பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சி.ஜி.எல் தேர்வுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை அதன் பன்மைத்துவத்தில் வேரூன்றியுள்ளது. "மாறாக, எல்லாவற்றிலும் ஒற்றைத் தன்மையைத் திணிக்க முயற்சி செய்வது ஜனநாயக உணர்விற்கு எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி தமிழ்ல் பதிவிட்டுள்ள ட்விட்டில் கூறியிருப்பதாவது: “பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் சி.ஜி.எல் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை.” என்று விமர்சனம் செய்துள்ளார்.
20,000-க்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியை மட்டும் பயன்படுத்துவது குறித்து திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"