/indian-express-tamil/media/media_files/HrrNvjHebaNooNq9rrct.jpg)
தனது கவிதையை பாடிய மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் குரலை பகிர்ந்து தி.மு.க எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
DMK MP Kanimozhi | Bhavatharini: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில், சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, இதற்காக கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரிணி இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 47 வயதான பவதாரிணிக்கு தொடர் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று மாலை உயிரிழந்தார்.
இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. முழுவதும் மூடப்பட்ட பெட்டியில் பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு பவதாரிணியின் உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
பாடலை பகிர்ந்து எம்.பி. கனிமொழி இரங்கல்
இந்நிலையில், தனது கவிதையை பாடிய மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் குரலை பகிர்ந்து தி.மு.க எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
'அம்மாவின் வாசனை' என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. எழுதிய கவிதைக்கு இளையராஜா இசையமைக்க, மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி இந்த பாடலை பாடி இருந்தார். இப்பாடல் அப்போது பதிவு செய்யப்பட்டாலும், பாடல் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், அந்தப் பாடலை மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் நினைவாக தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் கனிமொழி.
'அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார்கள். பவதாரணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்த கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன். pic.twitter.com/CqrLNdrfkv
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 26, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.