க.சண்முகவடிவேல்
DMK MP Kanimozhi: தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி அருகே உள்ள பூங்காவில் மாணவர்கள் படிப்பதற்கு பயன்பெறும் வகையில் 'படிப்பக வளாகத்தை' இன்று தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி தெரிவித்ததாவது;-
தி.மு.க-வை இல்லாமல் செஞ்சிருவோம் அப்படி சொன்ன பல பேர் இன்னைக்கு எங்க இருக்கான்னு தெரியல. இதெல்லாம் நாங்கள் நிறைய பெயரை பார்த்தாச்சு, அதனால இதெல்லாம் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கிடையாது. தேர்தல் நேரத்தில் திரும்ப திரும்ப பிரதமர் இங்கே வந்து அப்படியாவது யாராவது ஓட்டு போடுவார்களா என்று முயற்சி செய்து கொண்டு இருக்கின்ற சூழலில் வருவதனால வாக்கு வாங்கி அதிகரிக்கிறது என்று சொல்லி தான் ஆகணும்.
பிரதமருக்கு தமிழ் மொழி மேல் பற்றும், தமிழில் பேச ஆசையாக இருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி, கத்துக்கட்டும். நம்மள தான் இந்தி மொழி கற்க சொல்கிறார்கள். எனக்கு தெரிஞ்சு, வட இந்தியாவில் இருந்து வரக்கூடியவர்கள் எந்த தலைவர்களும் தமிழ் பேசுவதாக இல்லை. தமிழ் தாய் மொழியாக இல்லாதவர்கள் ஏதாவது ஒரு தென் இந்திய மொழியை கற்றுக்கொள்ள சொல்லுங்கள், அதுதான் உண்மையான சமூக ஒருமைப்பாடாக இருக்கும். தமிழ் மொழியை கற்றுவிட்டு, நல்ல தமிழில் பேசினால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“