/tamil-ie/media/media_files/uploads/2019/02/a644.jpg)
chennai, chennai airport, hennai Airport roof leakage, dmk mp kanimozhi, சென்னை விமான நிலையம், திமுக எம்.பி கனிமொழி, dmk, upa, chennai rains, rainfall, Tamil indian express news,chennai news
DMK MP Kanimozhi tweets about Chennai Airport roof leakage: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கனமழை காரணமாக விமான நிலைய கூரையில் ஒழுகும் நீரை சேகரிக்க பிளாஸ்டிக் தட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை திமுக எம்.பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் வெளியிட்டு விமான நிலைய பராமரிப்பை விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி தடுப்புகள் உடைந்து விழுவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்தது. இந்த கண்ணாடி உடையும் நிகழ்வு செய்தி ஒரு கட்டத்தில் பலருக்கும் சோர்வைத்தான் ஏற்படுத்தியது. விமான நிலையத்தில் உடைந்த கண்ணாடிகளுக்கு பதில் புதிய கண்ணாடிகள் அமைப்பதும் என்பது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் திமுக எம்.பி கனிமொழி சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக விமான நிலைய கூரையில் இருந்து ஒழுகும் மழைநீரை சேகரிக்க பணியாளர்கள் பிளாஸ்டிக் தட்டுகளை வைத்திருப்பதை படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சென்னை விமான நிலையத்தின் பராமரிப்பு இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டி கவனத்தை ஈர்த்துள்ளது.
First it was the ceiling falling. Now the roof has turned into showers. Plastic containers have been placed to collect the water dripping from above due to rains.
Place: @aaichnairport#Chennai airport pic.twitter.com/74JJOvnkho— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 19, 2019
கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், “முதலில் கூரை விழுந்தது. இபோது கூரை ஷவராக மாறியிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் மழை காரணமாக தண்ணீர் ஒழுகுவதை சேகரிக்க அங்கே பிளாஸ்டிக் தட்டுகள் வைக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழியின் இந்த பதிவை பலரும் சுட்டிக்காட்டி விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலைய பராமரிப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.