திமுக எம்.பி.யின் மகன் சாலை விபத்தில் இன்று (மார்ச் 10) அதிகாலை உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் (22) இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காரை ஓட்டிக் கொண்டு வந்தபோது சாலை தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அவருடன் காரில் சென்ற நபர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார். திமுக எம்.பியின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்தது அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு; 32 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
இதுகுறித்து தகவலறிந்த கோட்டகுப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணியளவில், 51/11, 7வது நிழற்சாலை, சவுந்தர்யா காலனி, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், இல்லத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை, வேலங்காடு இடுகாட்டில் தகனம் நடைபெறவுள்ளது.
முன்னதாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் மனோகர் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்ததால் அதன் மீது மோதுவதை தடுப்பதற்காக வண்டியை திருப்பும்போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியதில் விபத்து நேர்ந்தது என்று காவல் துறை வெளியிட்ட பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அஞ்சலி: மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ இல்லத்திற்கு நேரில் சென்று, சாலை விபத்தில் உயிரிழந்த அவரது மகன் ராகேஷ் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil