அமைச்சர் பிடிஆர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் – திமுக எம்.பி டிகேஎஸ் இளங்கோவன்

திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டியில், அமைச்சர் பி.டி.ஆர் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து ஆத்திரமூட்டும்போது அவர் எளிதாக ஆத்திரமடைகிறார். அதனால், அவருக்கு கட்சி தலைமை அறிவுரை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

DMK MP TKS ELangovan criticise Minister PTR Palanivel thiagarajan, TKS ELangovan, Minister PTR Palanivel thiagarajan, திமுக, டிகேஎஸ் இளங்கோவன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும், எளிதில் ஆத்திரமடைகிறார் பிடிஆர், திமுக, TKS Elangovan says Minister PTR Palanivel thiagarajan should attend gst council meeting, DMK, Minister PTR Palanivel thiagarajan gets provocative

அரசியலில் மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அவரது ஸ்டைலில் கிண்டலாக கடுமையாக பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில், சமீப காலமாக, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜக, அதிமுகவினரின் விமர்சனங்களுக்கு கோபப்பட்டு பதில் அளித்து வருகிறார். திமுகவில் இப்படி எந்த அமைச்சரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் போல, விமர்சனங்களுக்கு சமூக ஊடகங்களில் உடனுக்குடன் பதிலளிப்பது இல்லை.

இந்த சூழ்நிலையில்தான், திமுகவின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து ஆத்திரமூட்டும்போது அவர் எளிதாக ஆத்திரமடைகிறார். அதனால், அவருக்கு கட்சி தலைவர் அவருக்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

திமுகவின் செய்தித் தொடர்பாளரும் எம்.பி.-யுமான டி.கே.எஸ் இளங்கோவன் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “பிடிஆர் எளிதில் எரிச்சல் அடைகிறார். அவர் பேசுவதில் பெரும்பாலான பேச்சுக்கள் அவர் ஆத்திரமடைவதன் வெளிப்பாடாகவே உள்ளது. அவர் யாரையும் வம்புக்கு அழைப்பதில்லை, வம்புக்கு பேசுவதில்லை. ஆனால், மற்றவர்களின் பேச்சால் எளிதில் ஆத்திரமடைகிறார். ஓர் அரசியல்வாதியாக தன்னை அவர் கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். நான் எப்போதும் அவரிடம் அதைதான் சொல்வேன். எதிரணியினர் எப்போதும் நம்மை சீண்ட முயற்சிப்பார்கள். அப்போது, நாம் அதை சரியாக அணுக வேண்டியதுள்ளது. ஏனென்றால், அரசியல் களம் வித்தியாசமனது. அதிகாரத்தில் இருக்கும் நாம், செயல்களில் ஈடுபட வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்ப்பார்கள். சண்டைபோட வேண்டுமென விரும்பமாட்டார்கள். இதைத்தான் நான் எப்போதும் அவருக்கு அறிவுறையாக சொல்வேன்

திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து அமைச்சர்களையும் கவனித்து வருகிறார். அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். பழனிவேல் தியாகராஜனுக்கும் அவர் அறிவுரை வழங்குவார். எதிர்கட்சிகள் என்றால் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அதை நாம் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். எங்களுடைய கட்சி தலைமை, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுவதை கவனித்து வருகிறது. ஏற்கனவே, இது குறித்து ஒரு முறை அறிவுரை வழங்கியுள்ளார். இனி மேல் இது போன்ற சம்வங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அவர் மீண்டும் அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

மேலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது கொழுந்தியாள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று எதிர்க்கட்சியினர் வைத்த விமர்சனத்திற்கு, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், இல்லாத கொழுந்தியாள் வளைகாப்புக்கு செல்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று பொய் சொல்கிற முட்டாள்களே என்று கடுமையாக விமர்சனம் செய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk mp tks elangovan criticise minister ptr palanivel thiagarajan

Next Story
சேகர் ரெட்டி டைரி விவகாரம் : இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்-க்கு சம்மன் அனுப்பியது வருமான வரித்துறைSekhar reddy diary, income tax department summon to ops and eps, வருமான வரித்துறை சம்மன், ஓபிஎஸ், இபிஎஸ், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சேகர் ரெட்டி, அதிமுக, செந்தில் பாலாஜி, o panneerselvam, edappadi k palaniswami, aiadmk, dmk, senthil balaji, income tax department
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X