வெள்ளப் பணிகளுக்கு ரூ.5,060 கோடி நிவாரணம் வழங்க கோரி மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திமுக எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர். பாலு, “வெள்ள பாதிப்புகளை முழுமையாக மதீப்பீடு செய்ய இன்னும் நாள்கள் ஆகும். நிவாரணப் பணிகளுக்கு ரூ5060 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
தற்போது முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “பிரதமர் சென்னை வெள்ளம் ஏன் ஏற்பட்டது என எனக்கும் தெரியும்; ஸ்டாலின் கவலைப்பட வேண்டாம்” என கூறியதாக டி.ஆர். பாலு கூறினார்.
தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு முதல்கட்டமாக மத்திய அரசு ரூ.450 கோடி வழங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு நடத்தினார்கள்.
டி.ஆர். பாலு தனது பேச்சின்போது சென்னையில் 40 செ.மீ.க்கு அதிகமாக மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“