/indian-express-tamil/media/media_files/2025/04/03/PHFwBGNs2kGSzMxGQgwG.png)
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான திருச்சி சிவா நிறுத்தப்படலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை போட்டியாக அறிவிக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி தயாராகி உள்ளது.
நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், 2027 ஆகஸ்ட் 10 அன்று பதவிக்காலம் நிறைவடைய இருந்தபோதும், உடல்நலக் காரணத்தால் கடந்த ஜூலை 21 அன்று திடீரென ராஜிநாமா செய்தார்.
இதனால், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. செப்டம்பர் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாகவும், வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் ஆகஸ்ட் 21 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
பா.ஜ.க வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இதனால, 'நாமும் ஒரு தமிழரை களத்துல இறக்கி, பா.ஜ.க.,வுக்கு கடுமையான போட்டி கொடுப்போம்'னு இந்தியா கூட்டணி திட்டமிட்டு இருக்கிறதாம். அதற்காகவே திருச்சி சிவா, தி.மு.க.,வோட மூத்த தலைவர்கள்ல ஒருத்தர், மாநிலங்களவையில பலமுறை பேசி, பலரோட கவனத்தை ஈர்த்தவர். இவரை நிறுத்தினால், தமிழ்நாட்டு மக்களோட உணர்வை தூண்டி, பா.ஜ.க.,வுக்கு நல்ல சவாலா இருக்கும்னு எதிர்க்கட்சிகள் நம்புவதால், இந்தியா கூட்டணி வேட்பாளராக திருச்சி சிவாவை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.