Advertisment

காஷ்மீர் தொடர்பான விவாதம்; பெரியார் கருத்து அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்; திருச்சி சிவா கடும் எதிர்ப்பு

அனைத்து சமூக மக்களுக்காகவும் பெரியார் குரல் கொடுத்துள்ளார். பெரியார் குறித்து பேசியதை ஏன் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்; காஷ்மீர் விவகார விவாதத்தின்போது ராஜ்யசபாவில் கொந்தளித்த திருச்சி சிவா

author-image
WebDesk
New Update
Trichy Siva Uppuma story, Rajya Sabha, DMK MP Trichy Siva uppuma story, DMK, Trichy Siva speech in Rajya Sabha, திருச்சி சிவா, ராஜ்ய சபா, திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை, பாஜக, திமுக எம்பி திருச்சி சிவா

அனைத்து சமூக மக்களுக்காகவும் பெரியார் குரல் கொடுத்துள்ளார். பெரியார் குறித்து பேசியதை ஏன் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்; காஷ்மீர் விவகார விவாதத்தின்போது ராஜ்யசபாவில் கொந்தளித்த திருச்சி சிவா

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தீர்ப்பு தொடர்பாக ராஜ்யசபாவில் பேசியபோது, பெரியார் குறித்து தி.மு.க எம்பி அப்துல்லா தெரிவித்த கருத்துக்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Advertisment

ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019 திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இடங்களை அதிகரிப்பது, எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் உள்ளிட்டவை இம்மசோதாவில் இடம் பெற்றிருந்தன. முன்னதாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.

இந்த நிலையில் அமித்ஷா தாக்கல் செய்த மறுவரையறை மசோதா மீது தி.மு.க சார்பில் பேசிய எம்.பி எம்.எம்.அப்துல்லா, ”​​நமது முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்குக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை வைப்பதை விட அவரது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் மிகவும் முக்கியமானது,” என 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அப்போது பெரியார் குறித்து எம்.எம்.அப்துல்லா தெரிவித்த கருத்துக்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

இதனையடுத்து பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்தி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என்றார். இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் விவகாரத்தில் திருச்சி சிவா தி.மு.க.,வின் பிரதிநிதியாக பேசுகிறாரா? அல்லது ஒட்டுமொத்த "இண்டி" கூட்டணிக்காக பேசுகிறாரா? என கிண்டலடித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, ”ஒவ்வொரு இனமும் தங்களது தலைவிதியை தீர்மானித்துக் கொள்ள உரிமை உண்டு என தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார் என அப்துல்லா பேசினார். இதில் என்ன தவறு இருக்கிறது,” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. அவைத் தலைவரான துணை ஜனாதிபதியும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் இது தீவிரமான பிரச்சனை என்றும் கூறினார்.

பின்னர் பேசிய திருச்சி சிவா, 1963ல் சீனா யுத்தத்தின் போது திராவிட நாடு, தனி நாடு கோரிக்கையை தி.மு.க கைவிட்டது. வங்கதேச யுத்தத்தின் போது தமிழ்நாடுதான் பெரும் நிதி கொடுத்தது. திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டாலும் தி.மு.க, சுயாட்சி கொள்கையில் உறுதியாக உள்ளது. அனைத்து சமூக மக்களுக்காகவும் பெரியார் குரல் கொடுத்துள்ளார். பெரியார் குறித்து பேசியதை ஏன் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்ததை எதிர்க்கவே செய்கிறோம் என்றார். இதனால் சபையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Dmk Jammu Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment