scorecardresearch

பூமி பூஜையால் அப்செட் ஆன திமுக எம்பி: கார்த்தி சிதம்பரம் முதல் நீதிபதி சந்துரு வரை குவியும் விமர்சனம்

தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார், சாலை திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் பூமி பூஜை நடத்தப்பட்டது தொடர்பாக மூத்த அதிகாரியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இவரிடன் நடவடிக்கையை பல விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.

பூமி பூஜையால் அப்செட் ஆன திமுக எம்பி: கார்த்தி சிதம்பரம் முதல் நீதிபதி சந்துரு வரை குவியும் விமர்சனம்

தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார், சாலை திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் பூமி பூஜை நடத்தப்பட்டது தொடர்பாக மூத்த அதிகாரியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  இவரிடன் நடவடிக்கையை பல விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.  

2019 மக்களவை தொகுதி தேர்தலில் வியக்கத்தகுந்த வெற்றியைபெற்றவர் செந்தில்குமார். இவர் சமீபத்தில் சாலை திட்டம் தொடர்பான அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பூமி பூஜை நடத்தப்பட்டது. இந்நிலையில் இது போன்ற விஷயங்களை ஏன் நடத்துகிறீர்கள்?. இது மதவாத ஆட்சியா இல்லை திராவிட மாடல் ஆட்சியா? இந்து கடவுள் இருக்கிறார்கள் என்றால் ஏன் கிறிஸ்துவ பாதியார் இல்லை, இஸ்லாமியர்கள் இல்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ” ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள்” என்று  ட்வீட் செய்தார். இவரது செயலுக்கு  திமுக கட்சியினரே விமர்சித்துள்ளனர்.

மூத்த திமுக நிர்வாகி கூறுகையில், “ இது ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்வுபோல தோன்றுகிறது. மக்களுக்குத்தான் மதம் இருக்குறது. ஆனால் ஆளும் அரசுக்கு இல்லை என்ற அவரது நிலைபாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதுபோல அவர் நடந்துகொள்வது ஒரு புத்திசாலித்தனமான அரசியல் இல்லை என்றே கூறுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் “இது ஒரு தேவையற்ற கொந்தளிப்பு. இதுவரை எந்த திருமணம், புது வீடு கட்டும் நிகழ்வு, கட்சி தலைவர்களின் உறுதி மொழி ஏற்பு போன்ற நிகழ்வுகள் மத சடங்குகள் இல்லாமல் நடைபெற்றிருக்கிறது ? அவர்களுக்கு மக்கள் வாக்களித்தால், மத நம்பிக்கைகளை மக்கள் மறுத்துவிடுவார்கள் என்று தீவிர திரவிடம் பேசுபவர்கள் நினைத்து கொள்கிறார்கள் “ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி. சூர்யா கூறுகையில் “ இந்து மதத்திற்கு எதிராக அவர் நடந்துகொள்கிறார்” என்று கூறிய அவர் 2021 ம் ஆண்டு ஆயுத பூஜை நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டுகிறார்.

அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நிகழ்வு நடைபெறுவது மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலை செய்யும் இடம் மற்றும் வேலை செய்ய பயன்படும் உபகரணங்களுக்கு மரியாதை செலுத்துவது அடுத்தவர்களின் நம்பிக்கையை பாதிக்காது. ஆயூத பூஜை என்பது மதத்தை கடந்தது” என்று தெரிவித்துனர்.

இதுதொடர்பாக முன்னாள் நீதிபதி சந்துரு கூறுகையில் “ 1970களில் திமுக எம்பி ஒருவர் குங்குமம் வைத்திருப்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்தன. இதுவரை பாஜகவை எதிர்க்க திமுக அரசு என்ன செய்திருக்கிறது? திமுக அரசு அண்ணா சொல்லும் ஒரே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைபிடித்தால், எதற்காக திமுக எம்பி மற்ற மதங்களின் பிரதிநிதிகளை பூமி பூஜைக்கு அழைக்க வேண்டும் என்கிறார். அந்த ஒட்டுமொத்த திட்டமும் பொறியாளர்களால்தானே முடிக்கப்பட்டது?

மேற்கு உலக நாட்கள் போல நம் நாடு இல்லை. நமது நாடு நம்பிக்கையின் அடிப்படையில்தான் இயங்குகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் 100 வருட வரலாற்றில் நான் உள்பட 4 நீதிபதிகள் மட்டுமே கடவுளின் பெயரை குறிப்பிடாமல் உறுதிமொழி ஏற்றுக்கொண்டோம்.  எனவே இதுபோன்ற மொழியில் அவர் எதிர்வினையாற்றி இருக்க தேவையில்லை” என்று அவர் தெரிவித்தார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk mps outburst attracts more criticism