தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க அரசு மற்றும் கலைஞர் மு. கருணாநிதி குடும்பத்தினருக்கு எதிராக சமீபத்தில் கருத்து தெரிவித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு, தி.மு.க-வின் முரசொலி பதிலடி கொடுத்து விமர்சித்துள்ளது. மேலும், தெலங்கானா பண்ணை வீடு அரசியல் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தி.மு.க நாளிதழான முரசொலி கடுமையாக சாடியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க அரசு மற்றும் கலைஞர் மு. கருணாநிதி குடும்பத்தினருக்கு எதிராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்ததையடுத்து, முரசொலியின் இந்த விமர்சனம் வந்துள்ளது. மேலும், தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த பண்ணை வீடு அரசியல் குறித்தும் முரசொலி கேள்விகளை எழுப்பியுள்ளது.
தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக அரசு குறித்த கருத்துக்கு எதிராக கடும் விமர்சனத்தை வைத்துள்ளது. முரசொலியில் வெளியான தலையங்கத்தில், தெலுங்கானா அரசு அவருக்கு ஒத்துழைத்ததாகக் குற்றம் சாட்டியதோடு, ஆளுநராக அவரது தோல்வியைக் காட்டுகிறது. மேலும், ஆளுநர்கள் எரிமலைகளுடன் விளையாடுகிறார்கள் என்று கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் எரிமலைகளால் இமயமலையை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
“வீட்டில் தெலுங்கு பேசும் தெலுங்கு பூர்வீகமாகக் கொண்டவர்கள், தமிழன் போல் நடித்துக் கொண்டிருப்பவர்களால் நான் திருக்குறளை தெலுங்கானா சட்டசபையில் எதிரொலிக்க செய்த தமிழச்சி என்ற பெருமையை ஏற்க முடியாமல் விமர்சிக்கிறார்கள்” என்று தமிழிசை சௌந்தரராஜன் கலைஞர் மு. கருணாநிதி குடும்பத்தினரை சாடினார்.
“எரிமலைகளால் இமயமலையை ஒன்றும் செய்ய முடியாது என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். மேலும், நீங்கள் ஏன் எரிமலையாக இருக்க விரும்புகிறீர்கள்? ஒரு மலை ஏன் ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், பழங்கள் மற்றும் பூக்கள் நிறைந்ததாக இருக்க முடியாது? நான் பிறந்தது தமிழ்நாட்டில். என் உயிர் இந்த மண்ணின் காற்றிலும் தண்ணீரிலும் கலந்திருக்கிறது. நான் தமிழில் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழகத்தில் தமிழிசைக்கு உரிமை இல்லை என்று யாரும் கூற முடியாது.” என்று கூறினார்.
தெலுங்கானா ஆளுநரின் இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் மக்களுக்கு தெரியும் என, தி.மு.க.,வின் ஊதுகுழலான முரசொலியில், கட்டுரை வெளியானது.
தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ-க்களை விலை பேசுவது தொடர்பான சமீபத்திய பண்ணை வீடு அரசியல் குறித்தும் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"