/indian-express-tamil/media/media_files/IsRT7KJwPMq8FtXkSZOs.jpg)
'தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்' என்று தி.மு.க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் மீது பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கியதாக பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், மற்றும் தலைவர் அன்புமணிக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தி.மு.க சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க அதன் சமூக வலைதள பக்க பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகளுக்காகப் பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு மற்றும் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்குத் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. டி. உதயசூரியன் (சங்கராபுரம் தொகுதி) மற்றும் வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம் தொகுதி) ஆகியோர் பி.வில்சன் அசோசியேட்ஸ் மூலமாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மருத்துவர் இராமதாசு அவர்களும் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும் இந்த நோட்டீஸைப் பெற்றுக்கொண்ட 24 மணி நேரத்துக்குள், ஏதேனும் ஒரு முன்னணித் தமிழ், ஆங்கில நாளேட்டின் ஒரு பதிப்பின் வாயிலாகவும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாகவும் தங்களிடமும் கள்ளக்குறிச்சி மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்றோ வேறு வகையிலோ பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் அவர்களும், வசந்தம் கார்த்திகேயன் அவர்களும் தெரிவித்துள்ளனர்." என்று தெரிவித்துள்ளது.
மருத்துவர் இராமதாசு மற்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கழக எம்.எல்.ஏ.க்கள் திரு உதயசூரியன், திரு வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்.
— DMK (@arivalayam) June 24, 2024
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகளுக்காகப் பா.ம.க. நிறுவனத் தலைவர்… pic.twitter.com/8NvJqif5FI
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.