Advertisment

திமுக எம்.பி. ஞான திரவியத்துக்கு நோட்டீஸ்: 7 நாள்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு

திமுக எம்.பி. ஞான திரவியத்துக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 7 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK notice to Nellai MP Gnana Thiraviyam

திருநெல்வேலி மக்களவை திமுக எம்.பி. ஞான திரவியத்துக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சிஎஸ்ஐ விவகாரத்தில் ஞான திரவியம் எம்.பி. தலையிடுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று சிஎஸ்ஐ மதபோதகர் ஒருவர் தாக்கப்பட்டார்.
இது தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீப் போல் பரவின. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஞான திரவியம் எம்.பி. மீதும் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன.

Advertisment

இந்த நிலையில் திமுக தலைமை எம்.பி. ஞான திரவியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அனுப்பியுள்ள அந்த நோடடீஸில், “நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஞானத்திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
இந்தப் புகார் குறித்த விளக்கத்தினை 7 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Durai Murugan Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment