விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வாக்கு சேகரித்த திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் (வீடியோ)

விக்கிரவாண்டி தொகுதியில் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் வாக்கு சேகரித்தார். விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கானை பகுதியில் தனி நபராக ஒருவர் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு வீதி வீதியாகச் சென்று வீட்டு வாசலில் குடுகுடுப்பை அடித்து திமுகவுக்கு வாக்கு சேகரித்து வந்தார். முதலில் அவர் யார் என தெரியாத நிலையில், பிறகு அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பதும், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் என்பதும் தெரியவந்தது. திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சேலம் […]

dmk orator govindan video vikravandi by election - விக்கிரவாண்டி இடைத் தேர்தல் : குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வாக்கு சேகரிக்கும் திமுக தலைமைக் கோவிந்தன்
dmk orator govindan video vikravandi by election – விக்கிரவாண்டி இடைத் தேர்தல் : குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் வாக்கு சேகரிக்கும் திமுக தலைமைக் கோவிந்தன்

விக்கிரவாண்டி தொகுதியில் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் வாக்கு சேகரித்தார்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கானை பகுதியில் தனி நபராக ஒருவர் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு வீதி வீதியாகச் சென்று வீட்டு வாசலில் குடுகுடுப்பை அடித்து திமுகவுக்கு வாக்கு சேகரித்து வந்தார். முதலில் அவர் யார் என தெரியாத நிலையில், பிறகு அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பதும், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் என்பதும் தெரியவந்தது.


திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சேலம் கோவிந்தன், ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் இவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவிந்தனின் இந்த நூதன முறை பிரச்சாரம் மக்களை ரசிக்க வைப்பது மட்டுமின்றி மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளது. பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை விளக்கியும், தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்தும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk orator govindan video vikravandi by election

Next Story
பேனர் விபத்து – ஒரு கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ தந்தை ஐகோர்ட்டில் மனுsubashri death banner accident subashri father claims 1 crore chennai high court - பேனர் விபத்து - ஒரு கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ தந்தை ஐகோர்ட்டில் மனு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X