தமிழ்நாடு அரசியல் களத்தில் அவ்வப்போது சர்ச்சையான மேடைப்பேச்சுகள் புயலைக் கிளப்பி பலரது கண்டனம் மற்றும் எதிர்ப்பை பெறும். அதன் புதிய வரவாக தி.மு.க மேடைப்பேச்சாளர் சேலம் சுஜாதா இடம் பிடித்துள்ளார்.
முன்னதாக, தி.மு.க பேச்சாளராக வலம் வரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் கருத்துகள் அடிக்கடி சர்ச்சையாகும். குறிப்பாக, எதிர்க்கட்சியினர் குறித்து இவர் முன்வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும் உருவக் கேலி மற்றும் ஆபாசம் நிறைந்ததாக இருக்கும்.
இத்தகைய பேச்சுகளுக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சாமானிய மக்களிடம் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஒரு கட்சியை முன்னிறுத்தி பேசும் நபர், பொதுவெளியில் இவ்வாறு வரம்பு கடந்து பேசுவது முற்போக்கான அரசியலுக்கு அழகல்ல என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கினர். எனினும், அதற்கு பின்னரும் கூட அவர் தனது பேசும் தொனியை மாற்றிக் கொள்ளவில்லை என்று இணையவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த வரிசையில், தி.மு.க-வைச் சேர்ந்த சேலம் சுஜாதாவின் பேச்சுக்கு தற்போது கண்டனக் குரல் வலுத்து வருகிறது. அண்மையில் கட்சிக் கூட்டத்தில் பேசிய சேலம் சுஜாதா, தமிழக வெற்றிக் கழகத்தினர் குறித்து ஆபாசமான வகையில் பேசியுள்ளார்.
அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய், அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நடிகர் பாலாஜி போன்றோரை கடுமையாக விமர்சித்தார். உருவக் கேலியில் தொடங்கி தனிப்பட்ட வாழ்க்கை வரை அனைவர் மீதும் தனிமனித தாக்குதலை அவர் முன்வைத்தார்.
சேலம் சுஜாதாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், அரசியல் விமர்சகர் கிஷோர் கே. சுவாமி, ஊடகவியலாளர் சோனியா அருண்குமார் போன்றோர் சேலம் சுஜாதாவின் பேச்சுகளை பகிர்ந்து தி.மு.க-வை விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், கட்சி சார்பாக சேலம் சுஜாதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், தன்னுடைய ஆபாசமான பேச்சுகளுக்கு சேலம் சுஜாதா மன்னிப்பு கோர வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு டஃப் கொடுக்கும் தி.மு.க பெண் பேச்சாளர்: இணையவாசிகள் கடும் கண்டனம்
தி.மு.க நிர்வாகியான சேலம் சுஜாதா அண்மையில் த.வெ.க தலைவர் விஜய், அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரை ஆபாசமாக பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.