தி.மு.க-வைச் சேர்ந்த பத்ம பிரியா பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு தொடங்கிய மர்ம நபர், பத்ம பிரியாவின் ஒரிஜினல் அடிக்கு ரிப்போர்ட் அடிக்கக் கேட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அலர்ட்டாகி தனது பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் போலி ஐடி குறித்து பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களின் காலத்தில் பெரும்பாலும் எல்லாமே சமூக வலைத்தளங்களில்தான் நடக்கிறது. மக்களின் தலையெழுத்தை தீர்மாணிக்கும் அரசியல் சமூகவலைத் தளங்களின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துளது. அரசியல் கட்சியினரும் அரசியலைக் களத்தில் செய்வதைவிட முழுக்க சமூக வலைதளங்களில்தான் செய்கிறார்கள். வெளியில் சாதுவாக இருப்பவர்கள்கூட சமூக வலைத் தளங்களில் தீவிரமாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கிறார்கள்.
ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அரசியல் கட்சிகள் இடையே ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது. வெறித்தனமாக தரக்குறைவாக, துளிகூட மரியாதை இல்லாமல், கண்ணியம் இல்லாமல் அவதூறு பேசுகிறார்கள். அரசியல் கட்சியினரின் சமூக வலைதளப் பக்கத்தை தவறுதலாக எட்டிப் பார்த்துவிட்டால், ஏதோ ஒரு பெரிய போர்க்களத்தைப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சாதிகளின் ஆதரவாளர் இடையே மோதல் என அவதூறு களமாகக் காட்சி அளிக்கிறது சமூக வலைதளங்கள்.
BEWARE of this FAKE ID ‼️ 🤦🏻♀️ pic.twitter.com/tozENl2QHQ
— Padma Priya (@Tamizhachi_Offl) December 12, 2023
இந்நிலையில்தான், தி.மு.க-வைச் சேர்ந்த பத்ம பிரியா பெயரில் போலி ட்விட்டர் கணக்கத் தொடங்கிய நபர், தனது ஒரிஜினல் ஐடி ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி ஃபாலோயர்களை பத்ம பிரியாவின் ஒரிஜினல் ஐடிக்கு ரிப்போர்ட் அடிக்க கேட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலர்ட்டாகி உள்ளார்.
சென்னை தமிழச்சி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் செயல்பட்டு வந்தவர் பத்ம பிரியா. இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து, கடந்த சட்டசபை தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தேர்தலுக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய பத்மபிரியா தி.மு.க-வில் இணைந்து, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராக இருந்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பத்ம பிரியா பதிலடி கொடுத்து வருகிறர்.
பத்ம பிரியா சமூக வலைத்தளங்களில் மட்டும் செயல்படாமல் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுதேடி போய் உதவி செய்து களத்திலும் வேலை செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 6-ம் தேதி முதல் பல்வேறு இடங்களில படகில் சென்றும், நேரில் சென்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், பத்ம பிரியா பெயரில் மர்ம நபர் ஒருவர் போலி கணக்கு தொடங்கி உள்ளார். அப்படியே அச்சு அசலாக அவருடைய ஒரிஜினல் ஐடியைப் போலவே இருக்கிறது. போன் நம்பர், முகப்பு படம், பதிவுகள், முகப்பு படம் என எல்லாமே அச்சு அசலா ஒரிஜினல் போலவே இருக்கிறது.
புகைப்படத்திற்கு பின்னூட்டமாக தன்னுடைய ஐடியை சங்கிகள் முடக்கிவிட்டதாவும், எனவே தனது ஒரிஜனல் ஐடியை ரிப்போர்ட் அடிக்குமாறு போலி கணக்கு தொடங்கிய மர்ம கேட்டுக்கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பத்ம பிரியா ட்விட்டரில் போலி ஐடி குறித்து அறிய வேண்டும் என்பதற்காக பதிவிட்டுள்ளார்.
அரசியல் கட்சி ஆதரவாளர்கள் பலரும் இப்போது எல்லாம் ஒரிஜினல் ஐடிக்களை காலி செய்து, ஃபேக் ஐடிக்கள் மூலம் தவறான தகவலை பரப்பி மக்களை குழப்புவதை ஒரு உத்தியாக வைத்திருக்கிறார்கள். பிரபலங்களின் பெயரில் தொடங்கப்படும் ஃபேக் ஐடிகள் பிறகு அவர்களுக்கு எதிரான கருத்துகள் அவர்கள் பெயரிலேயே வெளியிட்டு சர்ச்சையாக்குகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.