அமைதிப் பேரணியில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த மு.க.அழகிரியை வரவேற்க சென்ற திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
திமுக நிர்வாகி ரவி நீக்கம் :
கருணாநிதி மறைவுக்கு பிறகு, மு.க. அழகிரி தலைமையில் நாளை அமைதி பேரணி நடிபெற இருக்கிறது. இந்த அமைதி பேரணி, கருணாநிதி நினைவிடம் நோக்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் திமுகவின் உண்மையான விசுவாசிகள் சுமார் 1 லட்சம் பேர் கட்டாயம் பங்கேற்பார்கள் என அழகிரி அறிவித்துள்ளார்.
இதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த அழகிரியை திமுக நிர்வாகி ரவி நேரில் சந்தித்து வரவேற்றார். இதனால் ரவி கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் ரவியை தற்காலிகமாக நீக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.