Advertisment

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது என ஸ்டாலின் ட்வீட்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹைட்ரோ கார்பன் திட்டம் திமுக கண்டன ஆர்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் திமுக கண்டன ஆர்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் : பெட்ரோலியத்துறை அமைச்சகம் இந்தியா முழுவதிலும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்திற்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.

Advertisment

தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி செயல்படுத்த உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையைப் படிக்க

திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் திமுக கட்சித் தலைவரான முக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் நோக்கில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற இருக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று திருவாரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment