சட்ட சபையை ஆளுநர் ஆர்.என். ரவி அவமதித்ததாக கூறி கோவை முழுவதும் தி.மு.க வினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
சட்டசபைக்குள் சென்ற ஆளுநர் கூட்டம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கூறி இருந்தார். ஆனால் தேசிய கீதம் இசைக்கப்படாமல் இருந்ததால் சட்ட சபையை விட்டு கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆளுநர் வெளியேறி விட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/5fd89d86-b89.jpg)
ஆளுநரின் இந்த செயலை கண்டித்து தமிழக முழுவதும் தி.மு.க.,வினர் இன்றும் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் கோவை மாநகர் முழுவதும் ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு? என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றை கேள்விகளாக தொடுத்து "#Get Out Ravi” என்ற ஹாஷ்டாக்கின் மூலம் எதிர்ப்பை பதிவு செய்து போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“