பேராசிரியர் அன்பழகன் மகள் மரணம்; திமுகவினர் அஞ்சலி

மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மகள் டாக்டர் மனமல்லி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

By: June 13, 2020, 2:18:48 PM

மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மகள் டாக்டர் மனமல்லி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த மார்ச்7-ம் தேதி காலமானார். அவருக்கு அன்புச்செல்வன் மகனும் டாக்டர் மனமல்லி உள்பட இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில், அன்பழகன் இறந்து சில மாதங்களிலேயே அவருடைய மகள் டாக்டர் மனமல்லி உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலமானார். அவரது மறைவு செய்தியை அறிந்த திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


பேராசிரியர் க.அன்பழகனின் மகள் டாக்டர் மனமல்லி மறைவுக்கு திமுகவினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்த நிலையில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மகள் இறந்திருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk perasiriyar k anbazhagans daughter dr manamalli passes away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X