மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுக்கின்றன. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை, கலவரங்கள் என ஒருவித பதற்றத்தோடு காணப்படுகின்றன.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று பேரணி நடந்தது. இதில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் பங்கேற்றனர். எழும்பூரில் உள்ள தாளமுத்துநடராசன் மாளிகை அருகில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரையில் இந்த பேரணி நடந்தது.
ஓசூர் சமத்துவபுரத்தை சேர்ந்த நாராயணப்பா என்ற 85 வயது பெரியவர், 'கலைஞருக்காக, தலைவருக்காக வந்தேன்' என்கிறார். மக்களுக்கான போராட்டம் என்பது வன்முறையல்ல என்பதை உணர்ந்த, தாத்தா நாராயணப்பா போன்ற தைரியமான பெரியவர்கள்தான் எங்களை வழிநடத்துகிறார்கள் #TNopposeCAA pic.twitter.com/xb4oINEYK7
— Udhay (@Udhaystalin) December 23, 2019
இதில் நாராயணப்பா என்ற 85 வயது திமுக தொண்டர் கலந்துக் கொண்டார். சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இந்த போராட்டத்திற்காக அவர் ஓசூரில் இருந்து வந்திருக்கிறார். இந்த வயதிலும் போராட்டத்திற்காக வந்திருக்கிறீர்களே என கேட்டதற்கு, கலைஞருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்றார் அவர். இந்த பேரணி எதுக்கு தெரியுமா என்றதற்கு, ”ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கிறாங்க, அத எதிர்த்து தான்” என்றார்.
அந்த பெரியவர் பேசிய வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, திமுக-வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ”ஓசூர் சமத்துவபுரத்தை சேர்ந்த நாராயணப்பா என்ற 85 வயது பெரியவர், 'கலைஞருக்காக, தலைவருக்காக வந்தேன்' என்கிறார். மக்களுக்கான போராட்டம் என்பது வன்முறையல்ல என்பதை உணர்ந்த, தாத்தா நாராயணப்பா போன்ற தைரியமான பெரியவர்கள்தான் எங்களை வழிநடத்துகிறார்கள் #TNopposeCAA” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டு, அந்த பெரியவரின் வீடியோவையும் இணைத்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.