Advertisment

நீட் தேர்வில் அ.தி.மு.க இரட்டை வேடம்: திருச்சி சிவா தாக்கு

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பேசுவதும், நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக நடந்து கொள்வதும் என அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - திருச்சி சிவா

author-image
WebDesk
New Update
Trichy

திருச்சி ரயில்வே ஜங்சன் எதிரில் காதிகிராப்ட் அலுவலகம் முன்பு மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் உண்ணாவிரத அறப்போரட்டம் இன்று(ஆகஸ்ட 20) நடைபெற்றது.

Advertisment

இந்த அறப்போரட்டத்தை மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் மாநகர செயலாளர் அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாநிலங்களவை உறுப்பினர் குழு தலைவர் திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது, "மருத்துவப் படிப்பு மற்றும் முதுநிலை படிப்புக்கான நுழைவு தேர்வு என்ற பெயரில் நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவைஒன்றிய அரசு நசுக்குகின்றது. ஆகையால் நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி, மாணவர் அணி மருத்துவர் அணி, ஒன்றாக இணைந்து மாபெரும் கண்டன போராட்டங்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அதன் கோப்புகளை தமிழக ஆளுநர் ரவி அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அப்போது அந்த கோப்புகளை ஆளுநர் நிராகரித்தார். நீட் தேர்வு என்பது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்ற கனவை எட்டா கனியாக ஆக்கிவிட்டது. மேலும் ஒன்றிய அரசு கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்களுக்கு அனுபவம் இல்லாத கல்வி முறையில் நீட் தேர்வு நடத்தப்படுவதால், அவருடைய மருத்துவ படிப்பு கனவு நிராகரிக்கப்படுகிறது. நீட் தேர்வுக்காக தற்போது இந்தியாவில் பல தனியார் கோச்சிங் சென்டர்கள் உருவாகியுள்ளன.

பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று, எளிதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பை தொடர்கிறார்கள். இதில் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நசுக்கப்படுகிறது. தொடர்ந்து திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறது. நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு எதிராக நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, வாக்கெடுப்பு நடக்கும் போது அதற்கு ஆதரவு தெரிவிக்காமல் அதிமுக வெளிநடப்பு செய்து, தமிழக மாணவர்களுக்கு அதிமுக பச்சை துரோகம் செய்தது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பேசுவதும், நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக நடந்து கொள்வதும் என அதிமுக இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கொள்கையில், திமுக உறுதியாக உள்ளது. விரைவில் இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு தமிழ்நாடு நிச்சயம் நீட் தேர்வில் விதிவிலக்கு பெரும் என தமிழ்நாடு முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டம் ஒரு தொடக்கம். இதில் விரைவில் நாங்கள் வெற்றியை பெறுவோம். தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறும். திமுக தொடர்ந்து நீட்டுக்கு எதிராக போராடிக் கொண்டு தான் வருகிறது. அதே போன்று திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்ததை, நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. நீட் தேர்வை பொருத்தவரை மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு உடன்படாத காரணத்தினால் தான் இன்றளவு இழுத்து அடிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் நீட் இல்லாத சூழ்நிலை உருவாகும்" எனப் பேசினார்.

அறப்போரட்டத்தில் எம்.எல்ஏகள் ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஆனந்த் , மருத்துவர் அணி அமைப்பாளர் கண்ணன் மற்றும் மாத்தூர் கருப்பையா சேர்மன் துரைராஜ் கதிர்வேல் டோல்கேட் சுப்பிரமணி சிங்காரம், அம்பிகாபதி செவந்திலிங்கம், கண்ணன் மாநில பொறியாளர் அணி கருணாநிதி மற்றும் மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, இளைஞரணி,
மாணவரணி, மருத்துவ அணிகளின் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உட்பட 2000க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment