மாற்றந்தாய் போக்குடன் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க; மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தி.மு.க சார்பில் ஜூலை 27-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க தலைமை வியாழக்கிழமை அறிவித்தது.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தி.மு.க சார்பில் ஜூலை 27-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க தலைமை வியாழக்கிழமை அறிவித்தது.

author-image
WebDesk
New Update
anna arivalayam

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தி.மு.க சார்பில் ஜூலை 27-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க தலைமை வியாழக்கிழமை அறிவித்தது.

Advertisment

இது தொடர்பாக தி.மு.க தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருபதாவது: “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.

ஆனால், இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழகம் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழகத்தை வஞ்சித்த பாசிச பா.ஜ.க அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தி.மு.க மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழக அரசை வஞ்சிக்கும் மத்திய பாசிச பாஜக அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தி.மு.க தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆசு ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழகம் எதிர்பார்த்த திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. அதே நேரத்தில், ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தி.மு.க  தலைமை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: