நீட் தேர்வுக்கு எதிராக திமுக இன்று மதுரை நீங்கலாக மாவட்ட தலைநகரில் போராட்டம் நடத்தியது. சென்னையில் நடந்த போராட்டத்தில் உதயநிதி கலந்துகொண்டார்.
அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக போராடி தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் பெயரை கேட்டதும், கண்கள் கலங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நீட் தேர்வு விவகாரத்தில் இன்றைய போராட்டம் முடிவல்ல. இதுதான் ஆரம்பம்.
பொதுதேர்வின் போது தற்கொலை செய்து கொள்வது வழக்கமானது என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து, "மாடு பிடிக்க போராடுகிறோம்; மாணவர்களின் உயிருக்காக போராட கூடாதா? எனக் கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து, அதிமுக மாநாட்டில் நீட் தேர்வுக்கான
தீர்மானம் நிறைவேற்றுவார்களா? எனவும் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, நீட் விவகாரத்தில் பிரதமர் வீட்டின் முன்பு
அமர்ந்து போராட தயார்…நீங்கள் வர தயாரா? வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை விரட்டி காங்கிரஸ் கட்சியை அமர வைத்தால் நீட் தேர்வு ரத்தாகும்" எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“