DMK rally protest live updates : போலீஸ் அனுமதி மறுத்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், இன்று தடையை மீறி போராட்டம் மற்றும் பேரணி நடத்த உள்ளனர். போராட்டத்தில் வன்முறை அரங்கேறும் அபாயம் உள்ளதால், உஷார் நடவடிக்கையாக, சென்னையில், 15 ஆயிரம் போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில், பஸ்களை முழுமையாக இயக்குவதற்காக, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி...
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, சென்னையில் நடைபெறும் மாபெரும் பேரணி
போராட்டம் தொடரும் : ஸ்டாலின், பா.ஜ., அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் வரும் 23 ஆம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாகவும், அந்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க., இன்று நடத்தும் பேரணியின் போது, பொதுசொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை, தி.மு.க.,வினரிடம் இருந்து வசூலிக்கும் அதிரடி நடவடிக்கையை, தமிழக அரசு எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்காக, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை முழுமையாக கண்காணித்து, 'வீடியோ' பதிவு செய்ய, ரகசிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
Live Blog
DMK rally protest live updates :திமுக கூட்டணி சார்பில் இன்று நடைபெறும் பேரணி மற்றும் போராட்டம் குறித்த செய்திகளை உடனுக்குடன் இங்கு காணலாம்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணியின் முடிவில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது, இது பேரணி அல்ல ; போர் அணி. இந்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும். இந்த பேரணிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும், பாதுகாப்பு அளித்த காவல்துறை உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பேரணிக்கு விளம்பரம் தேடித்தந்த அதிமுக கட்சிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பேரணிக்கு எப்படியும் அனுமதி கிடைத்துவிடக்கூடாது என்பதில் ஆளும் அதிமுக கட்சி அதிக முனைப்பு காட்டியது. நீதிமன்றம், நேற்றிரவு, பேரணிக்கு அனுமதி வழங்கியது என்று ஸ்டாலின் பேசினார்.
இந்தியா இதுவரை கட்டிக்காத்து வந்த அனைத்து நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, மோசமான இந்தியாவை உருவாக்க பாஜக நினைக்கிறது அதனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் போராட்டத் தீப்பற்றி கொண்டு எரிகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக பேரணியில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், எம்.பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
திமுக பேரணியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்க அக்கட்சி சார்பில் 2 வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். ஒரு வளையத்தில் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரும், மற்ற வளையத்தில் மற்ற தலைவர்களும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பேரணி நடைபெறும் பகுதியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் * அசம்பாவிதங்களை தவிர்க்க 6 கலவர தடுப்பு வாகனங்கள், 3 தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights