scorecardresearch

அமித் ஷாவுக்கும் அண்ணாமலைக்கும் தகராறா? தி.மு.க கேள்வி

பிரதமர் மோடி சென்னை வந்துபோது அடிப்படை ஏற்பாடுகளை மட்டுமே மாநில காவல்துறையும் செய்யும் என்று திமுக செய்திதொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவுக்கும் அண்ணாமலைக்கும் தகராறா? தி.மு.க கேள்வி

பிரதமர் மோடி சென்னை வந்துபோது அடிப்படை ஏற்பாடுகளை மட்டுமே மாநில காவல்துறையும் செய்யும் என்று திமுக செய்திதொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தபோது , அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் பிரச்சனை இருந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து அவர்  சமூபத்தில் கடிதம் வழங்கினார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர்  டி.கே.எஸ் இளங்கோவன் கூறுகையில்” பிரதமர் ஒரு மாநிலத்திற்கு பயணிக்கிறார் என்றால், அடிப்படை பாதுகாப்பு  ஏற்பாடுகளை மாநில அரசு செய்யும். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள்தான் அவரது பாதுகாப்பின் முழு பொறுப்பை எடுத்துகொள்வார்கள். அதில் முதல்வர் கூட தலையிட முடியாது. என்னை பொறுத்தவரை  அமித்ஷா மீது அண்ணாமலைக்கு ஏதோ கோவம் இருக்கிறது. அதனால் இப்படி பேசுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ” திமுகவில் உள்ளவர்கள் பேசத் தெரியாமல் பேசிகிறார்கள். பிரதமரின் அனைத்து விதமான பாதுகாப்பு மாநில அரசு கையில்தான் இருக்கும். “ என்று அவர் தெரிவித்துள்ளார்.   

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk questions about pm mdi security issue