/indian-express-tamil/media/media_files/2025/04/19/x3QSjMatX5zz5ESrAAuB.jpg)
தி.மு.க அமைச்சர் பொன்முடி பேச்சால் எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், தி.மு.க எம்.பி கல்யாணசுந்தரம், அமைச்சர் முன்னிலையில் இப்படி பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சேஷம்பாடி கிராமத்தில், தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க ராஜ்ய சபா எம்.பி கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய தி.மு.க ராஜ்ய சபா எம்.பி கல்யாணசுந்தரம், எல்லாவற்றுக்கும் அவசரப்படக்கூடாது. கல்யாணம் செய்து 10 மாத காலம் பொறுத்து இருக்க வேண்டும். அப்போதுதான், பத்து மாதத்திற்கு பிறகுதான் குழந்தை பிறக்கும்.
திருமண நாளே குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அது வேறு விதமாக தான் குழந்தை பிறக்கும் . அதற்கு முன்னரே பிறந்தால், தப்பான வழியில் பிறந்ததாக அர்த்தம்” என்று பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தி.மு.க அமைச்சர் பொன்முடி பேச்சால் எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், தி.மு.க எம்.பி கல்யாணசுந்தரம், அமைச்சர் முன்னிலையில் இப்படி பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. தி.மு.க எம்.பி கல்யாணசுந்தரத்தின் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து பலரும் தி.மு.க எம்.பி-யின் பேச்சு குறித்து விமர்சித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.