நிலைக்குழுக்களின் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்பு; 100% வருகைப்பதிவு பெற்ற திமுக எம்.பி

நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்ற திமுக எம்பி வில்சனுக்கு குடியரசு துனைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

DMK Rajya Sabha MP wilson achieves distinction, dmk mp wilson, rajya sabha mp wilson, திமுக எம்பி வில்சன், வில்சன் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்பு, வில்சன் எம்பி 100% வருகைப்பதிவு, DMK MP wilson achieves distinction, DMK MP achieves distinction

திமுக ராஜ்ய சபா எம்.பி பி.வில்சன் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுக ராஜ்ய சபா உறுப்பினர் வழக்கறிஞர் பி. வில்சன். இவர் திமுக சார்பில் தொடரப்பட்ட நீட் தேர்வு தொடர்பான வழக்கு, மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டங்களில், எம்.பி.க்களின் செயல்பாடு குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில், திமுக ராஜ்ய சபா எம்.பி பி. வில்சன், நாடாளுமன்றத்தின் நிலைக்குழுக்கள் நடத்திய அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார். அதோடு, நாடாளுமன்றத்திற்கு 100% வருகையைப் பதிவு செய்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு 100% வருகையைப் பதிவு செய்தவர்களில், திமுக எம்.பி வில்சன் மட்டுமல்லாமல் மேலும் 16 எம்.பி.க்கள் 100% வருகையை பதிவு செய்துள்ள்னார். இதில், பாஜகவைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் சமாஜ்வாடி மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) கட்ச்யில் இருந்து தலா 1 உறுப்பினரும் நாடாளுமன்றத்திற்கு 100% வருகையை பெற்றுள்ளனர்.

திமுக ராஜ்ய சபா எம்.பி பி.வில்சன் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்ற திமுக எம்பி வில்சனுக்கு குடியரசு துனைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். வில்சனின் சிறப்பான செயல்பாட்டுக்காக திமுகவினர் பலரும் சமூக ஊடகங்களில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk rajya sabha mp wilson achieves distinction

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com