த.வெ.க தலைவர் விஜய் அண்மையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடும் கிராம மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது தி.மு.க அரசை விமர்சனம் செய்தார்.
உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். மக்கள் நம்பும்படி நாடகம் ஆடுவதுதான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே. இந்த விமான நிலையத்துக்கான இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக ஒரு நிலைப்பாடா? என தி.மு.கவை விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், நேற்று திருநெல்வேலியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, இப்போது யார் யாரோ ஏதேதோ பேசுகிறார்கள். அவரின் அப்பாவையே நாங்கள் தான் அறிமுகப்படுத்தினோம். அவர் வந்து இப்போது நம்மிடம் சவால் விடுகிறார். நான் ஒன்று சொல்கிறேன் தி.மு.க-வை எதிர்த்தவன் வாழ்ந்ததாகவும் இல்லை, நிலைத்ததாகவும் இல்லை. வரலாறு இருக்கிறது. பேசுவதற்கு யோகிதை வேண்டும்.
நேற்று பேசிய அந்த சின்ன பையன், நாடகம் ஆடுவதில் தி.மு.க கைதேர்ந்தது எனப் பேசியுள்ளார். நீங்கள் யார். உங்கள் அப்பா யார் என்று கேட்டால் பதில் சொல்ல முடியுமா. நடிப்பது மட்டுமல்ல, நடிப்பதற்கு வசனம் எழுதி கொடுத்து நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டவர் தான் நீங்கள் எல்லாம் என்பதை மறந்துவிடக் கூடாது.
உங்கள் அப்பா யாரு. எங்கள் தலைவர் வசனம் எழுதி கொடுத்த படத்தை இயக்கியவர். மக்களுக்கு இதுஎல்லாம் தெரியும் என்று விஜயை ஆர்.எஸ் பாரதி விமர்சனம் செய்தார்.