தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க-வில், கட்சி அணிகளின் பதவிகளுக்கு மேடைப் பேச்சுத் திறன், திராவிடக் கொள்கையில் பயிற்சி, களப்பணி, மக்கள் செல்வாக்கு, பிக்ஷாட், என தகுதிகளின் அடிப்படையில் தொண்டர்களைத் தேர்ந்தெடுக்கும். ஆனால், தி.மு.க இப்போது தொண்டர் அணிக்காக சிலம்பம், கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது.
தி.மு.க-வின் தொண்டர் அணியின் புதிய மாநிலச் செயலாளர் பி.சேகர், தொண்டர் அணிக்கு சிலம்பம், டை குவான்-டோ, கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றவர்களை, தி.மு.க தொண்டர் அணியில் மாவட்ட அளவிலான பதவிகளுக்கு அடையாளம் காணுமாறு தி.மு.க மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், தி.மு.க-வில் தொண்டர் அணியில் மாவட்ட அளவிலான பதவிகளுக்கு சிலம்பம், கராத்தே, குங்ஃபூ பயிற்சி பெற்றவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது.
இதற்கு காரணம், கட்சித் தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும், தி.மு.க கூட்டங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும்தொண்டர் அணியின் முக்கியப் பொறுப்பாக இருப்பதால், தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்றவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூராட்சி என தி.மு.க பிற பிரிவுகளுக்கு செயல்வீரர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார். தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள், இந்த பதவிகளுக்கு தகுதியானவர்களை பரிந்துரைக்கும் அதிகாரம் உள்ளவர்கள். தற்காப்பு கலையில் தகுதியானவர்களைக் கண்டறிந்து, பிற நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தி.மு.க-வைத் தொடங்கிய அண்ணா காலத்தில், இயற்கை பேரிடர்களின்போது மக்களுக்கு உதவுவதற்காக சீரணி பிரிவு முதன் முதலில் உருவாக்கப்பட்டது” என்று பி. சேகர் கூறினார்.
1980-களில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்த அணி பலப்படுத்தப்பட்டது
“பின்னர், இது தொண்டர் அணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொண்டர் அணி உறுப்பினர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. 1980-களில் தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, மாநில அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்க மறுத்தபோது கட்சி நிகழ்வுகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க இந்த அணி பலப்படுத்தப்பட்டது” என்று பி. சேகர் கூறினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 2000-ம் ஆண்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. “கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு என்ற கட்சியின் குறிக்கோளுடன் இது ஒத்துப்போகிறது. தற்காப்பு கலைகள் தொண்டர்கள் இடையே சுய ஒழுக்கத்தை வளர்க்கும். தொண்டர் அணிக்கு “விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தொண்டர் அணி பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்போம்” என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க தொண்டர் அணியின் வேலை, கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதும், திமுக கூட்டங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும் அதன் முக்கியப் பொறுப்பு என்று கூறுகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.