விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் பொன்முடி கை ஓங்குகிறது என தி.மு.க வட்டாரங்கள் பேசி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து இன்று தலைமை கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் தி.மு.க விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா. புகழேந்தி மறைவெய்திய காரணத்தால் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் தெ. கௌதம்சிகாமணி, விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக
நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோன்று, விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக டாக்டர் ப. சேகர், (28, ஜெயபுரம் 2வது தெரு, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் – 604 001) விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அண்ணா அறிவாலயம் அறிவித்துள்ளது.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், அறிவித்துள்ளார். அறிவிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் செஞ்சி மஸ்தானின் கட்சி பதவி பறிப்பு ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.
சிறுபான்மை நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். அவரை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்து, ப.சேகரை தி.மு.க மேலிடம் நியமித்துள்ளது. இதற்கானகாரணத்தை திமுக மேலிடம் தெரிவிக்காத நிலையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் போதிய தீவிரம் காட்டாதது, மூத்த அமைச்சர் பொன்முடியுடனான மோதல் அதிகரித்ததே
பின்னணியாகக் இருக்கலாம் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“