ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், திமுக சட்டத் துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக சட்டத் துறை சார்பில், சட்டத் துறை இணைச் செயலாளர்கள் பரந்தராமன் எம்.எல்.ஏ (தொடர்பு எண் 99406-66269), ஈரோடு ராதாகிருஷ்ணன் (98427-55335), வழக்குரைஞர் அர்ஜுன் (95009-92005) தலைமையில் வார் ரூம் (War Room) அமைக்கப்படுகிறது.
தேர்தல் பணியாற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தேர்தல் குறித்த சட்டப் பிரச்னைகள் தொடர்பாக உடனுக்குடன் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணியாற்றும் கழக நிர்வாகிகளுக்கும் – கழகத் தோழர்களுக்கும் உதவிடும் வகையில் இது அமைக்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிடவில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸிற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் களம் காண்கிறார். அதிமுக தரப்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கவில்லை. நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனியாக களம் காண்கின்றன.
இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடவில்லை. பாஜகவிடம் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/