2019-ம் ஆண்டில் மாநிலத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38-ஐக் கைப்பற்றிய கூட்டணியின் அமோக வெற்றியைப் பிரதிபலிக்கும் நோக்கில், தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் 9 மக்களவைத் தொகுதிகளுக்கான இடங்களை பங்கீடு செய்து ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. இருப்பினும், தி.மு.க 2019-ம் ஆண்டு அளித்த 9 இடங்களை மீண்டும் வழங்குவதற்காக இண்டியா கூட்டணி கட்சியான காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்க: DMK stitches up seat-sharing pact with six regional allies, talks with Congress on
கணிசமான தலித் வாக்காளர்களைக் கொண்ட தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க), மூத்த தமிழ்த் தேசியத் தலைவர் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) உள்ளிட்ட முக்கிய கூட்டணிக் கட்சிகளுடன் தி.மு.க ஒப்பந்தம் செய்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அக்கட்சி வி.சி.க, சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்.), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க) ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கொ.ம.தே.க மேற்கு தமிழ்நாட்டில் ஆதரவு தளத்தைக் கொண்ட ஒரு சிறிய அமைப்பு. மேற்கு மாவட்டப் பகுதி முதன்மை எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
சிதம்பரம், விழுப்புரம் ஆகிய பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் வி.சி.க போட்டியிட உள்ளது. 2019-ல், வி.சி.க இந்த 2 இடங்களிலும் வென்றது. திருமாவளவன் சிதம்பரத்தில் வெற்றி பெற்றார், அக்கட்சியின் மற்றொரு வேட்பாளர் விழுப்புரத்தில் திமுக சின்னத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை, பேச்சுவார்த்தைகள் தீவிர விவாதங்கள் மற்றும் அரசியல் உத்திகளால் கவனிக்கப்பட்டது. வி.சி.க ஒரு பொதுத் தொகுதியைப் பெற முயற்சி செய்தது. ஆனால், வி.சி.க-வுக்கு அடிபணிவது மற்ற கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தும், குறிப்பாக சி.பி.ஐ.(எம்) மற்றும் சி.பி.ஐ ஆகிய இரு கட்சிகளிடம் இருந்தும் இதே போன்ற கோரிக்கைகளைத் தூண்டும் என்று தி.மு.க பயந்ததால் அது வெற்றிபெறவில்லை.
தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வட்டாரங்கள் தொகுதிப் பிரிவின் ஆரம்பப் விவரங்களைக் கொடுத்தன, அதில் சில தொகுதிகள் இடமாற்றமும் அடங்கும். உதாரணமாக, சி.பி.ஐ (எம்) மதுரையைத் தக்க வைத்துக் கொண்டாலும், கோயம்புத்தூருக்குப் பதிலாக திண்டுக்கல் அல்லது கடலூரைத் தேர்ந்தெடுக்க உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் சி.பி.ஐ (எம்) கோவை, மதுரை இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. கோயம்புத்தூரை விட்டுக்கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வற்புறுத்த வேண்டும் என்ற தி.மு.க.வின் முடிவுக்குப் பின்னால், தமிழக் பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலையை தவிர வேறு யாரும் அங்கிருந்து போட்டியிட மாட்டார்கள் என்ற ஊகம் உள்ளது.
கோவைக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் (எம்.என்.எம்) தலைவரும் நடிகராக மாறிய அரசியல்வாதியுமான கமல்ஹாசன் 2019 தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஒரு லோக்சபா தொகுதியில் போட்டியிடுவது அல்லது தேர்தலுக்கு பிந்தைய ராஜ்யசபா பதவியை ஏற்கும் விருப்பத்தை எம்.என்.எம் கட்சிக்கு தி.மு.க வழங்கியதாகக் கூறப்படுகிறது.
“கமல்ஹாசனை கோயம்புத்தூரில் போட்டியிட பரிந்துரைத்தோம். ஆனால் , அவர் சென்னை தெற்கு தொகுதியை விரும்புகிறார் என்பதால் உறுதிப்படுத்தப்படவில்லை, சென்னை சென்ட்ரல் எப்போதுமே தி.மு.க.வின் பாரம்பரிய கோட்டையாக இருப்பதால் தி.மு.க தலைமை அதை கூட்டணிக்கு விட வாய்ப்பில்லை. கமல்ஹாசன் கோவையை தேர்வு செய்யவில்லை என்றால், அக்கட்சியில் இருந்து தி.மு.க.வுக்கு சக்திவாய்ந்த முகம் கிடைக்கும்” என்று தி.மு.க மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, தி.மு.க உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கமல்ஹாசனின் ம.நீ.ம ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஒப்புக்கொண்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்டது. மேலும், இந்த மக்களவைத் தேர்தலில் ம.நீ.ம எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. தி.மு.க கூட்டணிக்கு ஆதரித்து பிரசாரம் செய்யும் என்று கமல்ஹாசன் கூறினார்.
திருப்பூர் மற்றும் நாகப்பட்டினத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைத்துக் கொண்டாலும், வைகோவின் ம.தி.மு.க., தற்போது ஈரோடுக்கு பதிலாக திருச்சி அல்லது விருதுநகரில் போட்டியிட விரும்புகிறது. கணிசமான சிறுபான்மை வாக்குகள் உள்ள ராமநாதபுரத்தில் த.மு.மு.க மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. 2019-ல் வென்ற கொங்கு நாட்டின் மையப்பகுதியான நாமக்கல் அல்லது கவுண்டர் சமூகத்தை மையமாகக் கொண்ட கொ.ம.தே.க தக்கவைத்துக் கொள்ளும்.
திருமாவளவன், பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒருங்கிணைந்த கூட்டணியை நிலைநிறுத்துவதற்கான தனது கட்சியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். மதச்சார்பற்ற கூட்டணியுடன் தேர்தல் வெற்றியை உறுதிசெய்ய ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த ஏற்பாடு குறித்து வைகோவும் திருப்தி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.