Advertisment

திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா மனைவி திடீர் மரணம்: போலீஸ் விசாரணை

DMK Speaker Person Tamilan Prasnna : திமுக முன்னணி பேச்சாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

author-image
WebDesk
Jun 08, 2021 16:13 IST
திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா மனைவி திடீர் மரணம்: போலீஸ் விசாரணை

DMK Speaker Tamilan Prasnna : திமுக பேச்சாளரும் , அக்கட்சியின் செய்தித்தொடர்பு இணை செயலாருமான தமிழன் பிரச்சன்னாவின் மனைவி திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திமுகவின் முன்னணி பேச்சாளர்களின் ஒருவரான தமிழன் பிரச்சன்னா சென்னை எருக்கங்சேரியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார், தற்கொலை செய்துகொண்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் தமிழன் பிரச்சன்னாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், தமிழன் பிரச்சன்னா தனது மணைவியை தற்கொலைக்கு தூண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilandu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment