/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-3-2.jpg)
"ஐந்தாண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் தானாகவே 1500 கோடி ரூபாய் நிதியைத் திரட்டிக் கொள்ள முடியும். ஆகவே, உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்" என்று மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தை திமுக வன்மையாக கண்டித்தது.
மேலும், " இந்த முடிவின் படி, அண்ணா பல்கலைக் கலகத்திற்கு அரசின் நிதி பங்கீடு இல்லாமல் போகும். நிதி பங்கீடு மாநில அரசு தராமல் இருந்தால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தே அண்ணா பல்கலைக் கழகம் விலகி, உயர் கல்வி உயர் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் வந்துவிடும்"என்றும் திமுக சுட்டிக் காட்டியது.
இதற்கிடையே, தமிழக அரசு சூரப்பாவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இன்று தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகள், அரசுப் பொறியியல் கல்லூரிகள முன்பாக கண்டன ஆரப்பாட்டத்தை திமுக இளைஞரணியும், மாணவரனியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"பேரறிஞர் அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை - பதவிக்காக மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது அதிமுக அரசு" –
- @dmk_youthwing செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள் பேட்டி.#SaveAnnaUniversitypic.twitter.com/VJW1N5NiTK
— DMK IT WING (@DMKITwing) October 15, 2020
கழகத்தலைவர் மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் திரு.@Udhaystalin ஆணைக்கிணங்க அண்ணா பல்கலைக் கழகத்தை பிரிக்கும் செயலை கண்டித்து இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு.@kvmuthuramaling அவர்கள் தலைமையில் மாவட்ட இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #SaveAnnaUniversitypic.twitter.com/5eYOlt7UTZ
— DMK Ramanathapuram திமுக இராமநாதபுரம் (@DMKRNpuram) October 15, 2020
#SaveAnnaUniversity@Udhaystalin@DMK4TN@DMKThenipic.twitter.com/FHyB2OrJ60
— தங்கதமிழ்செல்வன் (@ThangaTamilselv) October 15, 2020
விழுப்புரம் மத்திய மா.செ திரு.@pugazhenthidmk அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் Dr.@gauthamponmudy MP அவர்களின் முன்னிலையில் மாவட்ட @dmk_youthwing, மாணவர் அணி சார்பில் 'உயர்சிறப்பு அந்தஸ்து' எனும் பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் காவிப்பிடியில்
1/2 pic.twitter.com/hTOSQg3dLP
— DMK Viluppuram திமுக விழுப்புரம் (@DMKViluppuram) October 15, 2020
உலகப் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்கு தாரைவார்க்கும் நோக்கில் செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவின் செயல்களை கண்டித்து திமுக இளைஞரணி-மாணவரணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில்.
இடம்: ஈரோடு@Udhaystalin@arivalayam@DMK4TN@mkstalin@EzhilarasanCvmp#SaveAnnaUniversitypic.twitter.com/j65vrJNmZe
— Subbulakshmi Jagadeesan (@SubbulakshmiJa2) October 15, 2020
சி.வி சண்முகம் கண்டனம்: தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி சண்முகம் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா நடந்துக்கொண்ட விதம் ஒழுங்கீனமான நடவடிக்கை என்று கருத்து தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தானாக முன்வந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நடந்துகொண்ட விதம் ஒழுங்கீனமான நடவடிக்கை அதுபற்றி விழுப்புரத்தில் அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி.....#CVShanmugam#AnnaUniversitypic.twitter.com/wPGtMXTihD
— AIR News Chennai (@airnews_Chennai) October 15, 2020
இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும், இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பாதகம் விளைவிக்கிற செயலை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.