"ஐந்தாண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் தானாகவே 1500 கோடி ரூபாய் நிதியைத் திரட்டிக் கொள்ள முடியும். ஆகவே, உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்" என்று மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தை திமுக வன்மையாக கண்டித்தது.
மேலும், " இந்த முடிவின் படி, அண்ணா பல்கலைக் கலகத்திற்கு அரசின் நிதி பங்கீடு இல்லாமல் போகும். நிதி பங்கீடு மாநில அரசு தராமல் இருந்தால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தே அண்ணா பல்கலைக் கழகம் விலகி, உயர் கல்வி உயர் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் வந்துவிடும்"என்றும் திமுக சுட்டிக் காட்டியது.
இதற்கிடையே, தமிழக அரசு சூரப்பாவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இன்று தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகள், அரசுப் பொறியியல் கல்லூரிகள முன்பாக கண்டன ஆரப்பாட்டத்தை திமுக இளைஞரணியும், மாணவரனியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.வி சண்முகம் கண்டனம்: தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி சண்முகம் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா நடந்துக்கொண்ட விதம் ஒழுங்கீனமான நடவடிக்கை என்று கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும், இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பாதகம் விளைவிக்கிற செயலை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil