Dmk Leader Stalin Meet senior Member : தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தனது தந்தை வழியை பின்பற்றி திமுகவின் முத்த நிர்வாகியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது, கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின் தனது தந்தை வழியில் திமுகவின் மூத்த நிர்வாகியை அவரது இல்லத்தில் சந்தித்த நிகழ்வு திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள ஸ்டாலின், நேற்று அம்பை தொகுதியில் பிரச்சாரத்திற்காக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில திமுகவின் மூத்த நிர்வாகி பத்தமடை பரமசிவம் என்பவரின் இல்லம் இருப்பதை அறிந்து உடனாடியாக காரை திருப்ப சொல்லி அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். ஸ்டாலின் வரவை சற்றும் எதிர்பாராத பத்தமடை பரமசிவம், இன்ப அதிர்ச்சியில், உரிமையோடு ஸ்டாலின் கை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்று உபசரித்துள்ளார்.
தொடர்ந்து பழைய நினைவுகள் குறித்து பேசிக்கொண்டிருந்த இருவரும், சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ள திமுக தொண்டர்கள், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் திமுக ஒரு குடும்ப கட்சி என்று விமர்சனம் குறித்து பதிலளித்துள்ள திமுகவினர் பலதரப்பட்ட மனித மனங்களின் கூட்டுக்கலவையான திமுக ஒரு குடும்ப கட்சி தான் என தெரிவித்துள்ளனர்.
எம்ஜிஆர் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும் கூட
பத்தமடை பரமசிவம்,
சாத்தான்குளம் மகராசன் போன்ற நேர்மையான திமுக பிரமுகர்கள்
திமுகவை விட்டு விலகவில்லை!
நேரில் போய் அழைத்தும் கூட.. அவர் பின்னால் போக மறுத்து திமுகவில் தொடர்ந்தனர்!
இருவருமே கறைபடாத கரங்கள் கொண்ட செயல் வீரர்கள்! pic.twitter.com/B4Bx1xZfrj
— பாஸ்கர் செ ✳️ (@BaskerSerode) February 10, 2021
தலைவரும்... தொண்டரும்....????❤️
ஒரு தி.மு.க. தொண்டனுக்கான வாழ்நாளைய உதாரணம் பத்தமடை பரமசிவம் ஐயா...
பலதரப்பட்ட மனித மனங்களின் கூட்டு கலவையான தி.மு.க. ஒரு குடும்ப கட்சி தான்....????❤️????❤️@Udhaystalin@Anbil_Mahesh@AvudaiappanDMK @DrSenthil_MDRD pic.twitter.com/z5w1z5ecZL
— Athi Venkatesh (@VenkateshAthi) February 9, 2021
நெல்லை மாவட்ட
பெரியவர் அய்யா பத்தமடை
பரமசிவம் அவர்கள்
தி மு க என்ற ஆலமரத்தின் வைர வேர் அவர்களின்
அன்பு மழையில்
நனையும்
அடுத்த கால் நூற்றாண்டு கால தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் pic.twitter.com/YqIl24XVGU
— M K abdul majeed (@kabdulmajeed2) February 10, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.