திடீரென காரைத் திருப்பிய ஸ்டாலின்… கண்கலங்கிய மூத்த நிர்வாகி!

Stalin Meet Dmk senior Member : தென் மாவட்டங்களில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவின் மூத்த நிர்வாகியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

Dmk Leader Stalin Meet senior Member : தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தனது தந்தை வழியை பின்பற்றி திமுகவின் முத்த நிர்வாகியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது, கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின் தனது தந்தை வழியில் திமுகவின் மூத்த நிர்வாகியை அவரது இல்லத்தில் சந்தித்த நிகழ்வு திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள ஸ்டாலின், நேற்று அம்பை தொகுதியில் பிரச்சாரத்திற்காக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில திமுகவின் மூத்த நிர்வாகி பத்தமடை பரமசிவம் என்பவரின் இல்லம் இருப்பதை அறிந்து உடனாடியாக காரை திருப்ப சொல்லி அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். ஸ்டாலின் வரவை சற்றும் எதிர்பாராத பத்தமடை பரமசிவம், இன்ப அதிர்ச்சியில், உரிமையோடு ஸ்டாலின் கை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்று உபசரித்துள்ளார்.

தொடர்ந்து பழைய நினைவுகள் குறித்து பேசிக்கொண்டிருந்த இருவரும், சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ள திமுக தொண்டர்கள், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் திமுக ஒரு குடும்ப கட்சி என்று விமர்சனம் குறித்து பதிலளித்துள்ள திமுகவினர்  பலதரப்பட்ட மனித மனங்களின் கூட்டுக்கலவையான திமுக ஒரு குடும்ப கட்சி தான் என தெரிவித்துள்ளனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk stalin election campaign meet dmk senior member

Next Story
சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் பாஜகவில் இணைகிறார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express