Chennai News Highlights: மாநிலக் கட்சிகளை மிரட்டும் பா.ஜ.கவின் உத்தியே புதிய சட்டம் - ஸ்டாலின்

Tamil Nadu Latest News Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu Latest News Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
stalin

Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஸ்டாலின்திருமணநாள்வாழ்த்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - துர்கா ஸ்டாலினின் 50 ஆவது திருமண நாளையொட்டி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

  • Aug 20, 2025 21:30 IST

    தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் - சென்னை மாநகராட்சி  

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் முகமூடி இல்லாமல் திரிய விட்டாலோ அல்லது அழைத்துச் சென்றாலோ உரிமையாளர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் மற்றும் தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.



  • Aug 20, 2025 19:12 IST

    மத்திய அரசின் பதவி பறிப்பு மசோதாவுக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் 

    “மத்திய பா.ஜ.க அரசின் பதவி பறிக்கும் மசோதாவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரின் பதவி 30 நாட்களில் பறிபோகும். மன்னரால் விரும்பப்படாதவர்கள் அமலாக்கத்துறையால் கைதாவார்கள்” என்று மத்திய அரசின் பதவி பறிப்பு மசோதாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Aug 20, 2025 18:24 IST

    ஆன்லைன் பெட்டிங் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

    பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மசோதா நிறைவேறியுள்ள நிலையில், இனி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இந்த மசோதா சட்ட ஒப்புதல் பெற்றால், ஆன்லைன் பெட்டிங் கேம் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும்.



  • Aug 20, 2025 18:06 IST

    செங்குறிச்சி சுங்கச்சாவடியில் செப்.1 முதல் கட்டண உயர்வு

    உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச் சாவடியில் செப்.1 முதல் சுங்கக் கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டவுள்ளது. கார், ஜீப் வாகனங்களுக்கு தற்போது ரூ.65 வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்பட்டவுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கு ரூ.115 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.120 ஆக உயர்த்தபடுகிறது.



  • Aug 20, 2025 18:04 IST

    ”தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க தடையில்லை”

    சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளைத் தள்ளுபடி செய்து, மாநகராட்சியின் முடிவுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மாநகராட்சியின் இம்முடிவுக்கு தடை விதிக்க முடியாது என்றும், இது அரசின் கொள்கை முடிவு என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பின் மூலம், சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் இனிவரும் காலங்களில் தனியார் நிறுவனங்களின் வசம் செல்ல வாய்ப்புள்ளது. 



  • Aug 20, 2025 18:02 IST

    கார் டயர் வெடித்து விபத்து - 6 பேர் படுகாயம்; விசாரணை

    சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்ததால் கீழே கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Aug 20, 2025 17:30 IST

    "130-வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் கருப்பு மசோதா"

    அமித் ஷா தாக்கல் செய்த "130-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒரு கருப்பு மசோதா" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 30 நாட்கள் சிறையில் இருந்தாலே முதல்வரை பதவியில் இருந்து அகற்றுவது என்பது பா.ஜ.க.வின் அத்துமீறல். சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்கும் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Aug 20, 2025 17:15 IST

    அமித்ஷா மீது மசோதாவை கிழித்து வீசிய எதிர்க்கட்சியினர்

    முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அமித்ஷா மீது மசோதாவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Aug 20, 2025 17:10 IST

    திருவாரூரில் வெறிநாய் கடித்து 2 பேர் காயம்

    திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி கிராமத்தில் வெறிநாய் கடித்து பாட்டி, பேரன் காயமடைந்துள்ளனர். வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்த குழந்தை அஜ்மல் பாஷாவை வெறிநாய் கடித்துள்ளது. பேரன் அஜ்மல் பாஷாவை காப்பாற்ற முயன்றபோது பாட்டி சுல்தன் பீவியையும் வெறிநாய் கடித்துள்ளது.

     



  • Aug 20, 2025 16:40 IST

    ஜெயலலிதா வருமான வரி வழக்கு: ஐகோர்ட் உத்தரவு

    ஜெயலலிதா வருமான வரி வழக்கில், ரூ.36 கோடி செலுத்தக் கோரி, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபாவுக்கு எதிராக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் மனுவிற்கு வருமான வரித்துறை பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். சட்டப்படி 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், 7 நாட்களில் வருமான வரியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கபட்டுள்ளதாக தீபா மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.



  • Aug 20, 2025 16:05 IST

    காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து

    சென்னைக்குள் நுழையக் கூடாது என பாஜக மாநில பட்டியலின பிரிவு செயலாளரும், பிரபல ரவுடியுமான நெடுங்குன்றம் சூர்யாவுக்கு எதிராக காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Aug 20, 2025 15:18 IST

    ஜெய்சங்கர் அஞ்சலி

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், மாஸ்கோவில் உள்ள வீரர்களின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.

    (காணொளி ஆதாரம்: ஸ்புட்னிக்)



  • Aug 20, 2025 15:16 IST

    குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புலி

    ஊட்டி அடுத்த மசினகுடியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் புலி வலம் வந்தது. நேற்று கரடி, இன்று புலி என வனவிலங்குகளின் வருகையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



  • Aug 20, 2025 14:55 IST

    பிரதமர், முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய மசோதா தாக்கல் - நாடாளுமன்றத்தில் கூச்சல்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதன்கிழமை அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா, 2025 ஐ தாக்கல் செய்தார். ஊழல் அல்லது கடுமையான குற்றச் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு குறைந்தது 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ள மத்திய அல்லது மாநில அமைச்சரை பதவி நீக்கம் செய்வதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.

    கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்கள் கூட்டுக் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் கூச்சல் நிலவுகிறது. 



  • Aug 20, 2025 14:49 IST

    சீமான் மீது வழக்கு - ஐகோர்ட் உத்தரவு 

     

    நீதித்துறையை ஆபாசமாக விமர்சித்த புகாரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான் பேச்சு குறித்து வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.



  • Aug 20, 2025 14:39 IST

    தேர்தலில் போட்டியில்லை - சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்!

    தேர்தலில் போட்டியில்லை என்று நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் சூர்யா அரசியல் களம் காண்கிறார் என்ற செய்தி தவறானது. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திக்கு நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் மறுப்பு தெரிவித்தும் உள்ளது. உண்மைக்கு மாறான போலியான செய்தி மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது என விளக்கம் அளிக்கப்பட்டது.

     



  • Aug 20, 2025 13:30 IST

    ராமலிங்கம் கொலை வழக்கு - பிரியாணி கடைக்காரர் கைது

    கும்பகோணத்தைச் சேர்ந்த பாமக வழக்கறிஞர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கொடைக்கானலில் பிரியாணி கடைக்காரரை என்ஐஏ கைது செய்தது. 2019-ல் நடந்த கொலையில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இம்தாத்துல்லா கைது செய்யபப்ட்டுள்ளார்.



  • Aug 20, 2025 12:53 IST

    அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

    சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அமலாக்கத்துறைக்கு எதிராக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Aug 20, 2025 12:50 IST

    ஆன்லைன் பெட்டிங் கேம்க்கு தடை - மக்களவையில் புதிய மசோதா தாக்கல்

    ஆன்லைன் பெட்டிங் கேம் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் வகையில் ஆன்லைன் பெட்டிங் கேம்க்கு தடை விதித்து  மக்களவையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு தடை விதிக்கும் புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விதிகளை மீறி ஆன்லைன் பண விளையாட்டு சேவை, பரிவர்த்தனை செய்வோருக்கு சிறை, அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது



  • Aug 20, 2025 12:25 IST

    ராகுல் காந்தியை 2029 தேர்தலில் பிரதமராக்குவோம் - தேஜஸ்வி யாதவ் 

    பிரதமர் மோடியை தூங்கவிடாமல் செய்யும் ராகுல் காந்தியை 2029 தேர்தலில் பிரதமராக்குவோம் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வேரோடு பிடுங்கி எறியப்படும். வாக்குகளை திருடி, பீகார் மக்களின் வாக்குரிமையை பா.ஜ.க பறிக்க விரும்புகிறது என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்



  • Aug 20, 2025 12:24 IST

    புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

    தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. 38 மாவட்டங்களிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க தமிழ்நாடு அரசு முடிவு. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 35 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல். புலம்பெயர் தொழிலாளர்கள் எங்கு உள்ளனர், என்ன பணி செய்கின்றனர் என்பதை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Aug 20, 2025 11:36 IST

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் சென்று சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளரிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு அளித்தார்



  • Aug 20, 2025 11:11 IST

    தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்க விதிகள் வெளியீடு

    தமிழ்நாடு மாட்டின இனப்பெருக்க விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டு இனங்களில் மட்டுமே, இயற்கை முறையிலான மாட்டினப்பெருக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும். விந்து நிலையங்கள், அதில் பயன்படுத்தப்படும் காளைகள், இனப்பெருக்க தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் ஆகியோர் பதிவு செய்ய வேண்டும்.



  • Aug 20, 2025 11:03 IST

    ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

    ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து, நெற்கட்டும்செவலை நெற்கட்டான்செவலாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவருக்கு என் வீரவணக்கம். சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Aug 20, 2025 11:01 IST

    புதிய சட்டத்துக்கு காங்கிரஸ் எம்.பி. வம்சி கிருஷ்ணா கண்டனம்!

    30 நாள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் பதவியை பறிக்க வகை செய்யும் மசோதா கொடூரமானது என காங்கிரஸ் எம்.பி. வம்சி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள மசோதாவை கடுமையாக எதிர்ப்போம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பாஜக தங்கள் வசதிக்கு எப்படி பயன்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே என்று கூறியுள்ளார்.



  • Aug 20, 2025 11:00 IST

    தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க தடை இல்லை: உயர்நீதிமன்றம்

    தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை. மாநகராட்சியுடன் தமிழ்நாடு அரசு கலந்து பேசி தூய்மை பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை தர வேண்டும் என கூறிய நீதிமன்றம், தூய்மைப் பணியை தனியாருக்கு தரும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்தது.



  • Aug 20, 2025 10:51 IST

    மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்

    மதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம். ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக்கோரி 15 நாட்களுக்குள் மல்லை சத்யா எழுத்துப்பூர்மான விளக்கம் அளிக்கலாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 



  • Aug 20, 2025 10:27 IST

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா| மீது சரமாரித் தாக்குதல்

    அவரது வீட்டில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வின்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் முதலமைச்சரை அறைந்து, முடியைப் பிடித்து இழுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. குற்றத்தில் ஈடுபட்டவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. 



  • Aug 20, 2025 10:05 IST

    தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைவு!

    தங்கம் விலை ஒரு சவரன் ரூ.73,440 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.55ம் சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.

     



  • Aug 20, 2025 10:04 IST

    நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    செங்கல்பட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் நடனமாடிய பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகிழ்ச்சியுடன் நடனமாடி கொண்டிருந்த நிலையில் மேடையில் உயிர் பிரிந்தது.



  • Aug 20, 2025 09:31 IST

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல்

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் முதலமைச்சரை கடுமையாக தாக்கினார். இதில் முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

     



  • Aug 20, 2025 09:27 IST

    மாநாட்டுத் திடலில் தவெகவினர் சிறப்பு பூஜை

    தவெக 2ஆவது மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டுத் திடலில் தவெகவினர் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பூஜையில் பங்கேற்றனர்.

     



  • Aug 20, 2025 08:53 IST

    ராமலிங்கம் கொலை வழக்கு - என்.ஐ.ஏ 10 இடங்களில் சோதனை

    ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானலில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட 8 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டுள்ளது.



  • Aug 20, 2025 08:51 IST

    மத்திய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை இன்று தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்

    ஒன்றிய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை இன்று தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அரசியல் சண்டைகளுக்கு இ.டி பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகளைக் குறிவைக்க இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். 



  • Aug 20, 2025 08:45 IST

    பிட்புல் நாய் கடித்து ஒரு பலியான சம்பவம்

    சென்னையில் பிட்புல் நாய் கடித்து கருணாகரன் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில் நாயின் உரிமையாளர் பூங்கொடி மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தல் முறையாக விலங்குகளை கையாளாமல் இருந்தது தொடர்பான பிரிவுகளில் குமரன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

     



  • Aug 20, 2025 08:19 IST

    புத்துயிர் பெறும் இந்தியா - சீனா உறவு.. 12 உடன்படிக்கைகளில் கையெழுத்து!

    இந்தியா - சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் எல்லை வர்த்தகம் திறத்தல், பிரிக்ஸ் மாநாட்டின் தலைமைக்கு ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் உள்ளிட்ட 12 உடன்படிக்கைகளை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியா வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Aug 20, 2025 08:09 IST

    பேருந்தை மீட்க முயன்ற கிரேன் கவிழ்ந்து விபத்து

    பரமக்குடி அருகே அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதி 22 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்தை மீட்க முயன்றபோது கிரேன் கவிழ்ந்து விபத்தில் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



  • Aug 20, 2025 08:08 IST

    நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

    பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் சூதாட்ட தளங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Aug 20, 2025 08:07 IST

    தமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

    திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை மேற்கொண்டுள்ளது. திண்டுக்கல் பேஹம்பூர் அருகே எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி ஷேக் அப்துல்லா வீட்டிலும் என்..அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

     



  • Aug 20, 2025 07:38 IST

    மேட்டூர் அணை நடப்பாண்டில் 5வது முறையாக அதன் முழு கொள்ளளவை (120 அடி) எட்டியது

    சேலம் மேட்டூர் அணை நடப்பாண்டில் 5வது முறையாக அதன் முழு கொள்ளளவை (120 அடி) எட்டியது. நீர்வரத்து 1.16 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் 90,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     



  • Aug 20, 2025 07:36 IST

    5-வது முறையாக நிரம்பியது

    நீர்வரத்து அதிகரிப்பால் நடப்பாண்டில் 5-வது முறையாக மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியது. நீர்வரத்து 1,16,683 கன அடியாக அதிகரித்துள்ளதால், 90,000 கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.



  • Aug 20, 2025 07:35 IST

    சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம்

    முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் கொண்டுவர மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிமுகம் செய்கிறார்.



  • Aug 20, 2025 07:34 IST

    அதிமுக யாருக்கும் அடிமையில்லை - ஈபிஎஸ்

    அதிமுக யாருக்கும் அடிமையில்லை என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார். பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் அந்தர்பல்டி அடிப்பது திமுக தான் எனவும் விமர்சித்துள்ளார்.



  • Aug 20, 2025 07:33 IST

    இந்தியா - சீனா இடையே திறக்கப்படும் எல்லை வர்த்தகம்

    இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல். உத்தரகாண்ட், ஹிமாச்சல், சிக்கிம் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் திறக்க உடன்படிக்கை.



  • Aug 20, 2025 07:30 IST

    சிபி ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல்

    குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் என்.டி.கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். என்.டி.ஏ கூட்டணி கட்சி எம்.பி.க்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: