பிப்ரவரி, 2022-ல் நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான திட்டங்கள் திட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆளும் திமுக, மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய மாநகராட்சிகள் மற்றும் நகரங்களில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறது.
திமுகவுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிற நாகர்கோவில், கோவை மற்றும் சேலம் மாநகராட்சிகளை கைப்பற்ற திமுகவினர் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஸ்வீப் செய்து வெற்றி பெற்றது. வரவிருக்கும் தேர்தலில் பெரும்பாலான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அமைப்புகளையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கையுடன் திமுக செயல்பட்டு வருகிறது. இருப்பினும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டைகளான நாகர்கோவில், கோவை மற்றும் சேலத்தில் திமுக கடுமையான போட்டியை எதிர்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூன்று மாநகராட்சிகளின் அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வரும் திமுகவின் மூத்த தலைவர் ஒருவர், நாகர்கோவிலில் பாஜகவின் செல்வாக்கு காரணமாக திமுக நாகர்கோவில் மாநகராட்சி மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனக் கருதுகிறது என்று கூறினார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான, சேலம் முந்தைய அதிமுக ஆட்சியில் பல உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பெற்று பெரும் பயனடைந்தது.
முந்தைய ஆட்சியில் அதிமுக அமைச்சரவையில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணியின் கோட்டையாக கோவை கருதப்படுகிறது. செல்வாக்கு மிக்க பிரபலமான தலைவராக இருக்கும் எஸ்.பி. வேலுமணி, சிறுபான்மை வாக்காளர்களில் ஒரு பகுதியினரிடமும் செல்வாக்கு பெற்றவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தொடர் சோதனைகள் மற்றும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பல ஊழல் வழக்குகள் இந்த முறை அவரது நிலையை பலவீனப்படுத்தி உள்ளன.
நாகர்கோவில் மாநகராட்சி நிலைமை குறித்து திமுகவினர் கூறுகையில், “நாகர்கோவில் மாநகராட்சியை வெல்வது என்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அங்கே கட்சியின் வெற்றியை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பாஜக - அதிமுகவின் ஆபத்தை மக்களுக்கு புரிய வைப்பதற்காக எங்களுடைய தொண்டர்கள் ஏற்கனவே மக்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டனர். கோவை அடுத்த சவாலாக இருக்கலாம். சேலமும் எளிதான மாநகராட்சி அல்ல. கோயம்புத்தூர் மற்றும் சேலத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டாலும், நாகர்கோவில் தொடர்ந்து கடினமான இடமாகவே உள்ளது என்பது கட்சி தொண்டர்களின் கருத்தாக உள்ளது” என்று தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகள் எப்போதுமே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருந்து வருகின்றன. இந்த முறை அப்படிப்பட்ட போக்கு தொடர்வதற்கான குறிப்பிடத்தக்க அறிகுறிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
அ.தி.மு.க.வில் பலவீனமான எதிர்க்கட்சியாக மாறியதற்கு 5 முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு சிக்கலில் சிக்கியிருப்பது திமுகவுக்கு சாதகமாக மாறலாம்.
இருப்பினும், புதிய கட்சிகள் உட்பட பல கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்குவதால் பிப்ரவரியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சிக்கலானதாக இருக்கலாம். அதிமுகவின் கூட்டணி கட்சிகளான டாக்டர் ராமதாஸின் பாமக மற்றும் விஜயகாந்தின் தேமுதிக உட்பட பல சிறிய கட்சிகள் இந்த முறை போட்டியிடுகின்றன. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.
கடந்த சில நாட்களாக பேசாமல் அமைதியாக இருந்து வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகளுக்கு திமுகவை குற்றம் சாட்டி ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மாணவர்களின் மனதில் தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கி திமுக அரசியல் செய்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என அதிமுக அறிக்கை வெளியிட்டது.
இந்த ஆண்டு மே மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் ஸ்டாலின் விளிம்புநிலை மக்கள் மற்றும் பெண்களுக்காக பல திட்டங்களை அறிவித்துள்ளார். திமுக வாக்குறுதி அளித்த இதுவரை அமல்படுத்தப்படாத பெண் குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், கல்விக்கடன் தள்ளுபடி, டீசல் விலை குறைப்பு என ஆளும்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த திமுக தலைவர்களில் ஒருவரான திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும் முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கோவை, சேலம், நாகர்கோவிலுக்கு செல்வார். உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பதவியேற்பார் என்ற செய்தியை மறுத்து கோவையில் முகாமிட்டுள்ள உதயநிதி அத்தகைய பதவியில் விருப்பம் இல்லை என்று கூறினார்.
திமுகவுக்கு எதிராக ‘குடும்ப வாரிசு அரசியல்’ பிரச்சினையை பாஜக தொடர்ந்து எழுப்பி வரும் நிலையில், உதயநிதி தனது பங்களிப்பு முதல்வர் ஸ்டாலினுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே ஒரு வெறும் தூதுவராக அல்லது பாலமாக இருப்பேன் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அடுத்த 6 மாதங்களில் நடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகள், பெரும்பாலான ஊரக மற்றும் பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வென்றது.
2011ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டில் முடிவடைந்தபோதும், பல்வேறு வழக்குகள் காரணமாக இதுவரை தேர்தல் நடத்த முடியவில்லை. இது மாநிலம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகத்தை அதிகாரிகள் நடத்துவதற்கு வழிவகுத்தது. இந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முதலில் அக்டோபர் 2016-ல் திட்டமிடப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சியான திமுக தாக்கல் செய்த மனு உட்பட பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
சட்டம்-ஒழுங்கு பிரச்னை, பழங்குடியினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என்பன உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக தேர்தல் நடைபெறவில்லை. மேலும், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில் சிக்கித் தவித்ததால், உள்ளாட்சித் தேர்தல் தாமதமானது. எதிர்கட்சிகள் தயாராக போதிய அவகாசம் கொடுக்காமல் அவசர அவசரமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 2019 டிசம்பர் இறுதியில் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த அக்டோபர் மாதம் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.