/indian-express-tamil/media/media_files/lxVdhP0ppVjEKONelRx4.jpg)
மக்களவைத் தேர்தல் - வேட்புமனு தாக்கல்: தமிழிசையை அரவணைத்த தமிழச்சி
DMK Thamizhachi | Thangapandian BJP Tamilisai Soundararajan | LokSabha polls 2024: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ் பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்கள் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அரசு வேலை நாட்களில் தினமும் காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை மட்டும் பெறப்படும்.
வேட்புமனு மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இன்று தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தென் சென்னை தொகுதியில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் ஒரே நேரத்தில் வந்தனர்.
அப்போது இருவரும் கட்டியணைத்து நலம் விசாரித்துக்கொண்டனர். தொடர்ந்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த முக்கிய அரசியல் கட்சிகளின் பெண் தலைவர்கள் கட்டியணைத்து நலம் விசாரித்துக்கொண்ட இந்த சம்பவம் இரு கட்சியினரிடையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.