தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக நடந்து வரும் துப்பாக்கி சூட்டிற்கு இதுவரை 12 பேர் இரையாகியுள்ளனர். காப்பர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால், ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நீண்ட நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் 100வது நாள் போராட்டத்தின் போது வெடித்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். நேற்று முன்தினத்தில் இருந்து இன்று வரை தூத்துக்குடியில் ஆங்காங்கே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. போலீசாரின் தோட்டாக்களுக்கு இதுவரை 12 பேர் பலியான துயர சம்பவம் தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கோரச் சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் நாளை (மே 25ம் தேதி) திமுக சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை நேற்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
,
முன்னதாக இதே தேதி அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்திற்குப் பதிலாக முழு அடைப்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.