DMK treasurer Duraimurugan hospitalized in Apollo : திமுகவின் பொருளாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உற்ற தோழனுமான துரைமுருகன் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோவில் காய்ச்சலுக்காக அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், இன்று மதியம் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி #DuraiMurugan #DMK #ApolloHospital pic.twitter.com/AFcYsKXJoh
— Sun News (@sunnewstamil) 19 June 2019
ஏற்கனவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளான மே 23ம் தேதி சிறுநீரகத் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னை