தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும் அதிமுகவைத் தான் குறிவைத்து சிதறடிக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளை குறிவைத்து திமுக தனது பக்கம் ஈர்த்து வருகிறது. இதனால், திமுக, டிடிவி தினகரனின் அமமுகவை மெல்ல கரைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அதிமுக அமைச்சரும் டிடிவி தினகரனின் ஆதரவாளராகவும் அமமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் உள்ள பழனியப்பனை அமமுகவில் இருந்து திமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு அமமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த ஒரு இளம் அமைச்சர்தான், அமமுகவில் இருந்து பழனியப்பனை இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே திமுக இளம் அமைச்சர்தான், ஒரு வாரத்துக்கு முன்பு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரை அமமுகவில் இருந்து திமுகவிற்கு அழைத்து வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது தெரியவந்துள்ளது. இது ஒருபுறம் என்றால், இந்த பலமிக்க இளம் அமைச்சர் அமமுகவில் உள்ள பழனியப்பனை மிகவும் தாமதமாக அணுகியுளார். அமமுகவில் சசிகலாவின் மீது அதிருப்தியில் உள்ள பல முக்கிய நிர்வாகிகளை அதிமுகவை நோக்கி இழுப்பதில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆர்வமாக உள்ளதால், அமமுகவில் உள்ளவர்களுக்கு அதிமுக முகாமில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று ஒரு வட்டாரம் தெரிவிக்கிறது.
சமீபத்தில் சென்னையில் இருந்த திமுக அமைச்சரை ஒரு கோரிக்கை தொடர்பாக அமமுக நிர்வாகி ஒருவர் அழைத்தபோது திமுகவின் திட்டம் வெளிச்சத்துக்கு வந்தது. அமமுகவின் அலுவலக பொறுப்பாளர் கென்னடியை அமைச்சரின் வீட்டில் இருந்தார். மேலும், திமுக அமைச்சர் தயக்கம் இல்லாமல் அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
அமமுகவில் இருந்து பழனியப்பனை திமுகவுக்கு இழுப்பதற்கான காரணம் என்ன என்று விசாரித்தபோது, தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கட்சியில் முக்கிய தலைவர்கள் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறது என்றும் பழனியப்பனின் வருகை திமுகவுக்கு ஒரு பெரிய ஊக்கமளிக்கும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சசிகலாவின் அரசியல் ஆர்வத்தை புரிந்துகொண்டிருந்தாலும் இந்த வாய்ப்பை மறுப்பது கடினம் என்கிறார்கள். அமமுகவில் தன்னுடன் இருந்த இன்றைய திமுகவின் முக்கிய நிர்வாகிகளான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு திமுகவில் வழங்கப்பட்ட அங்கீகாரத்தை கருத்தில் கொண்டால், அவர் இந்த வாய்ப்பை மறுக்கமாட்டார் என்கிறார்கள்.
எப்படியானாலும், ஆளும் கட்சியான திமுக தனது நேர் எதிர்க்கட்சியான அதிமுகவை குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமமுகவை மெல்ல கரைத்து வருகிறது. அமமுகவின் மாவட்ட செயலாளர்களை, முன்னாள் எம்.எல்.ஏ.க்களை இழுத்து வந்த திமுக இப்போது அமமுகவின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கு குறி வைத்துள்ளது. பழனியப்பன் தேர்வு என்னவாக இருக்கும் என்பது விரைவில் தெரிய வரும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“